தொடர் கண்காணிப்பில் சிக்கிய வெளிநாட்டுப் பெண் போதை பெட்லர்...

தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில், வெளிநாட்டைச் சேர்ந்த பெண், பெட்லராக போதை பொருட்கள் விற்றக் கதை அம்பலமாகியுள்ளது.

தொடர் கண்காணிப்பில் சிக்கிய வெளிநாட்டுப் பெண் போதை பெட்லர்...

சென்னை : பெருங்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து தடை செய்யப்பட்ட ஆம்ஃபிடமைன் போதைப் பொருளுடன் இருந்த ஐவரி கோஸ்ட் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் என்ற வெளிநாட்டுப் பெண் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஜஸ்டினிடம் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புடைய 56 கிராம் ஆம்ஃபிடமைன் போதைப் பொருள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | பல நாட்கள் கழித்து மீண்டும் சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு...

தொடர் கண்காணிப்பின் அடிப்படையில் தொடர்ச்சியாக மும்பையில் இருந்து சென்னைக்கு ஆம்ஃபிடமைன் போதைப் பொருளுடன் வந்து, சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெறும் இரவு கேளிக்கை நிகழ்ச்சிகளில் இளைஞர்களுக்கு போதைப் பொருள் விற்றதை கண்டுபிடித்ததன் அடிப்படையில் வெளிநாட்டுப் பெண் ஜஸ்டின் கைதாகியுள்ளார்.

மேலும், விசாரணையில் விசா காலாவதியான பின்னும் தொடர்ந்து வெளிநாட்டுப் பெண் இந்தியாவில் வசித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட ஜஸ்டினிடம் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | தற்கொலை செய்த விசாரணை கைதியின் உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது...