தற்கொலை செய்த விசாரணை கைதியின் உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது...

விசாரணை கைதியாக அழைத்துச் செல்லப்பட்டவர், மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், பிரேத பரிசோதனை செய்து அவரது உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்கொலை செய்த விசாரணை கைதியின் உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது...
Published on
Updated on
2 min read

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலக மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை செய்துகொண்ட நிலையில், பிரேதப் பரிசோதனை முடிந்து அவரது உடல் மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அயப்பாக்கம் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தெலுங்கானாவைச் சேர்ந்த ராயப்பன் ஷாஜி ஆண்டனி என்பவரை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்ல முற்பட்டபோது ராயப்பன் அலுவலகத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அம்பத்தூர் நீதிமன்ற மேஜிஸ்திரேட் பரம்வீர் மற்றும் திவ்யா ஆகியோர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை துவங்கியது.

முன்னதாக தற்கொலை செய்துகொண்ட விசாரணை கைதி ராயப்பன் உடலை மேஜிஸ்திரேட் பரம்வீர் மற்றும் திவ்யா ஆய்வு செய்து பின் வீடியோ பதிவு செய்தவாறே பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. சுமார் 4 மணியளவில் துவங்கிய பிரேதப் பரிசோதனை 4 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.

பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில் விசாரணை கைதி ராயப்பன் ஷாஜி ஆண்டனி உடல் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெறுவதற்கு முன் மருத்துவமனை பிணவறை முன் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அழுது புலம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட ராயப்பனின் போதைப் பொருள் கடத்தல் தொழில் தொடர்பாக அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com