தற்கொலை செய்த கைதியின் பிரேத பரிசோதனை துவங்கியது...

விசாரணை கைதி ராயப்பன் ஷாஜி ஆண்டனி விசாரணையின் போது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் கே.எம்.சி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையானது தொடங்கியுள்ளது.
தற்கொலை செய்த கைதியின் பிரேத பரிசோதனை துவங்கியது...
Published on
Updated on
1 min read

அயப்பாக்கம் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட விசாரணை கைதி ராயப்பன் ஷாஜி ஆண்டனி விசாரணையின் போது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் கே.எம்.சி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையானது தொடங்கியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராயப்பன் ஷாஜி ஆண்டனி என்பவரை சோழவரம் அருகே தடை செய்யப்பட்ட 48 கிலோ ஆக்ஃபிடமைன் போதைப் பொருளுடன் மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராயப்பன் என்பவரை அதிகாரிகள் அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே இன்று அதிகாலை விசாரணை கைதி ராயப்பன் அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ராயப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணை கைதி ராயப்பன் உடல் பின்னர் கே.எம்.சி மருத்துவமனைகு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் காவல் விசாரணையில் மரணம் அடைந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போதைப் பொருள் கடத்தல் தொழில் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் ராயப்பன் ஷாஜி ஆண்டனி தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ராயப்பன் ஷாஜியுடைய உடல் பிரேத பரிசோதனையானது துவங்கியுள்ளது.

அம்பத்தூர் நீதிமன்ற மேஜிஸ்திரேட் பரம்வீர் விசாரணை கைதியின் உடலை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தியபின் பிரேதப் பரிசோதனை துவங்கி நடைபெற்று வருகிறது. பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com