ஆன்லைன் சூதாட்டத்தால் மனைவியை இழந்த கணவன்!

ஆன்லைன் சூதாட்டத்தை  நிறுத்தும்படி பலமுறை கூறியும்,  கணவன் நிறுத்ததால்  இரண்டு கைகுழந்தைகளை தவிக்கவிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆன்லைன் சூதாட்டத்தால் மனைவியை இழந்த கணவன்!

சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் ஞான செல்வன் (வயது 31). இவரது மனைவி வகிதா (வயது-28). இவர்களுக்கு திருமணம் ஆகிய நான்கு வருடங்கள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

ஞான செல்வன் பம்மல் நாகல்கேணியில் உள்ள சூப்பர் லாபி பிரிண்டிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஞான செல்வம் தினம் தோறும் இரவு முழுவதும் ஆன்லைனில் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத் தடை நீங்கி ஓராண்டு: தடுமாற்றமின்றி அவசரச் சட்டம் பிறப்பிப்பீர்!

ஒருவருடத்திற்கு மேலாக ஆன்லைன் சூதாட்டத்தில் செல்வன் பணம் கட்டி விளையாடி வந்துள்ளார்மாதம் வரும் சம்பளத்தை விட அதிகமாக ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்து வந்ததால் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது .இதனால் மிகுந்த மன உளைச்சலில் வகிதா இருந்துள்ளார்.

நேற்றும் வழக்கம் போல் ஞான செல்வன் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி1000 ரூபாய் இழந்ததும் இதை அறிந்த வகிதா கணவரிடம் ஆன்லைன் சூதாட்டம் நிறுத்தம் படி கூறினார் .ஆனால் அதை கேட்காமல் இருந்துள்ளார். அதன்பின்னர் இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டம் : ஈடு செய்ய வாலிபர் எடுத்த முடிவு !!

இந்நிலையில் வாய் தகராறு முற்றிய நிலையில் தான் சொந்த ஊரான திருச்செந்தூருக்கு தன் தாய் வீட்டிற்கு சென்று விடுவதாக கூறிவிட்டு செல்வன் இருந்த அறையினை வெளிப்பக்கமாக தாப்பாள் போட்டு விட்டு பக்கத்து படுகை அறைக்கு சென்று தனது சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சத்தம் கேட்ட செல்வன் கதவை திறக்க முடியாமல் வெளியில் பூட்டி இருந்ததால் ஜன்னல் வழியாக அருகில் இருந்தவர்களை கத்தி கூச்சலிட்டு கூப்பிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கும் பொழுது மெயின் கதவும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவினை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்ததில் வகிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

மேலும் படிக்க | நான் நடிக்கும் விளம்பரத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? சரத்குமார் கேள்வி!

உடனடியாக சங்கர் நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூர் ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்இதனை தொடர்ந்து சங்கர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதுமட்டுமின்றி திருமணமாகி நான்கு வருடமே ஆனதால் தாம்பரம் ஆர்டிஓ விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட மன உளைச்சலால் இரண்டு குழந்தைக்கு தாயான வகிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | சட்டவிரோத பணப்பரிமாற்றம்....அரிய வகை உயிரினங்கள்...அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய தொழிலதிபர்!