ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டம் : ஈடு செய்ய வாலிபர் எடுத்த முடிவு !!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 2 லட்சத்தை இழந்ததாகவும், வேலை இல்லாத சூழ்நிலையாலும் கொள்ளையடிக்க திட்டம்

ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டம் : ஈடு செய்ய வாலிபர் எடுத்த முடிவு !!

கார் ஓட்டுநர்

சென்னை வேளச்சேரி, ஷேசாத்ரிபுரம் பிரதான சாலையில் 68 வயதான மூதாட்டி இந்துமதி தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த ஓராண்டிற்கு முன்பு கார் ஓட்டுநராக இஸ்மாயில் என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். 

ஆன்லைன் சூதாட்டம்

இந்துமதியின் அக்கா வீட்டில் வீட்டுவேலை செய்து வரும் இஸ்மாயில் மனைவி விஜி பரிந்துரையின் பேரில் தேவைபடும்போது கார் ஓட்டுநராக இஸ்மாயில் பணிபுரிந்து வந்துள்ளார். நாளடைவில் இந்துமதி வீட்டிலும் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் இஸ்மாயில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி ரூபாய் 2 லட்சம் வரை பணத்தை இழந்ததாகவும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் தெரியவந்தது. 

பாரில் நட்பு

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நிலையில் நண்பரோடு வடபழனியில் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கு 35-வயதான சலாம் என்பவர் அறிமுகமாகியுள்ளார். மது போதையில் இருந்த இஸ்மாயில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 2 லட்சம் பணத்தை இழந்தது குறித்தும் வேலையில்லாமல் திண்டாடுவது குறித்தும் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகள் குறித்து சலாமிடம் கூறியுள்ளார். 

புதுத்திட்டம்

இதை கேட்ட சலாம் இந்த பிரச்சனையில் இருந்து மீள ஒரு வழி உள்ளது. திருடி பணம் சம்பாதிக்கலாம் என ஐடியா கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர். அப்பொது இஸ்மாயில் அவ்வப்போது கார் ஓட்ட செல்லும் மூதாட்டி இந்துமதிவுடன் யாரும் இல்லை என்பதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு  நகையை பறிக்க திட்டமிட்டு கடந்த 30ம் தேதி இருவரும் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு அணிந்துக் கொண்டு வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த வளையல், தங்கச்சங்கிலி, கம்மல் என 14 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 

சிசிடிவு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி இந்துமதி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு தனிப்படை அமைத்து சம்பவ இடத்தின் அருகில் உள்ள மற்றும் சாலையில் பாதுகாப்பிற்காக பொறுத்தியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைபற்றிய போலீசார் மூதாட்டி இந்துமதியிடம் சிசிடிவி காட்சியில் பதிவானதை கான்பித்துள்ளனர். அதை பார்த்த மூதாட்டி இவர் என்னிடம் வேலை பார்த்த கார் ஓட்டுனர் போல் இருப்பதாக கூறியுள்ளார்.  

தலைமறைவு

சந்தேகத்தின் அடிப்படையில்  போலீசார் சென்னை சைதாபேட்டை காவாங்கரையை சேர்ந்த இஸ்மாயில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவருடைய செல்போன் வீட்டில் உள்ள நிலையில் அவர் அங்கு இல்லாதது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.  பின்னர் போலீசார் விசாரணையில் இஸ்மாயில் தேனிக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும் இஸ்மாயில் எப்பொழுதும் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு நபரிடம் புதிய சிம் கார்டுகளை வாங்குவது வழக்கமாக வைத்துள்ளார். இதை அறிந்த போலீசார் அந்த நபர் மூலம் புதிய சிம்கார்டு வாங்க வருமாறு இஸ்மாயிலை சென்னை வரவழைத்தனர். கூட்டாளி சலாமுடன் சென்னை வந்த இஸ்மாயிலையும் சலாமையும் போலீசார் கைது செய்தனர். 

நஷ்டத்தை ஈடுசெய்ய...

பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 2 லட்சத்தை இழந்ததாகவும், வேலை இல்லாத சூழ்நிலையாலும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி முதலில் மூதாட்டியிடம் தங்களது கைவரிசையை காட்டினோம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

பின்னர் கொள்ளையடித்த 14 சவரன் தங்க நகைகளை போலீசார் இஸ்மாயில் சலாமிடமிருந்து பறிமுதல் செய்தனர்.  இதில் சலாம் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.  கூடா நட்பு கேடாய் அமையும் என்ற பழமொழிக்கேற்ப டாஸ்மாக் பாரில் கூடிய நட்பு தற்பொழுது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது.