நான் நடிக்கும் விளம்பரத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? சரத்குமார் கேள்வி!

நான் நடிக்கும் விளம்பரத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? சரத்குமார் கேள்வி!
Published on
Updated on
1 min read

திருச்சியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவரும்,திரைப்பட நடிகருமான சரத்குமார் பங்கேற்றார்.

கட்சி தொடங்கி 15 ஆண்டுகள்

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்து, 16 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.

விலைவாசி உயர்வை கடுப்படுத்த மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் நோக்கமுடைய எளிய மனிதர்கள் யாரும் தேர்தலில் நிற்க முடியாத நிலையுள்ளது. வசதி படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல. 

இணையத்தில் நல்லதும் உள்ளது

ஆன்லைன் சூதாட்டத்தை தடை  செய்யும் அதிகாரம் அரசிடம் உள்ளது. இணையத்தில் நல்லதும் இருக்கிறது. தீயதும் இருக்கிறது. இதில் நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள். தீயதை விட்டு விடுங்கள். 

எந்த ஒரு அரசும் இளைஞர்கள் போதை பழக்கத்தில்  வீணாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. அதை தடுக்க அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆபாச படம், சூதாட்டம், மது, புகை அனைத்தையும் தடைசெய்யுங்கள்.போதை பொருள்கள் எப்படி தமிழகத்தில் ஊடுருகிறது என்பது தெரியவில்லை. அதனை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். இந்திய அரசு தனது கையில் அதிகாரத்தை குவித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலை நீடித்தால் மாநில அரசே தேவை இல்லை என்னும் நிலை ஏற்படும். 

குஜராத் கலவரத்தில் ஒரு பெண்ணை கற்பழித்தவர்கள் சிறையில் இருந்து வெளியில் வரும்போது இனிப்பு கொடுக்கிறார்கள். இதை யாரும் கேட்பதற்கில்லை. கள்ளக்குறிச்சி கலவரம் நடந்திருக்காமல் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ராகுல் காந்தியின் நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துகள். இவ்வாறு சரத்குமார் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com