நம்பி வாங்க.. நாசமா போங்க.. இளம்பெண்களுக்கு செயலி மூலம் ரூட் விட்ட கில்லாடி...

ஓ.எல்.எக்ஸ் ஆப்பில் பியூட்டிஷியன் வேலைக்காக பதிவு செய்யும் பெண்களை, வேலை தருவதாக அழைத்து சென்று நகைப்பறிப்பில் ஈடுபட்ட கில்லாடி பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நம்பி வாங்க.. நாசமா போங்க..   இளம்பெண்களுக்கு செயலி மூலம் ரூட் விட்ட  கில்லாடி...

சென்னை: திருவொற்றியூரைச் சேர்ந்த சுமித்ராவும் மற்றொரு பெண்ணும், வடபழனி காவல்நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், தனது மசாஜ் சென்டரில் பணிபுரியும் இளம்பெண் ஒருவரை 2 ஆண்கள் மிரட்டி நகையையும் பணத்தையும் பறித்துக் கொண்டதாகக் கூறினார். இந்த புகார் தொடர்பாக விசாரணை தொடர்ந்தனர்.

புகாரில், ஒரு வாரத்திற்கு முன்பு, ஓ.எல்.எக்ஸ் ஆப்பில் பியூட்டிஷியன் வேலை வேண்டும் என விண்ணப்பித்ததாகவும் அதற்கு, நந்தினி என்பவர் தொலைபேசி வாயிலாக தங்களை தொடர்பு கொண்டு மசாஜ் தொழிலில் ஈடுபட வேண்டும் எனவும் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | தந்தை மகள் இணைந்து சென்ற இறுதி ஊர்வலம்... கண்ணீரில் மூழ்கிய சாலைகள்...

அது மட்டுமின்றி, அரைகுறை ஆடைகளுடன் மசாஜ் தொழில் செய்தால், அதிகபட்ச பணம் வழங்குவதாக அப்பெண் மனதை நந்தினி மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். பின், வடபழனி மசூதி தெருவில் உள்ள லாட்ஜ் ஒன்றில், இரண்டு கஸ்டமர்கள் வருவதாகவும், அவர்களுக்கு மசாஜ் முடித்த பின்பு தான் பணம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து லாட்ஜிக்கு சென்ற சுமித்ரா வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்ததாகவும், அப்போது மசாஜ் செய்ய வந்த வாடிக்கையாளர்கள் இருவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி சுமித்ராவிடமிருந்து 2 சவரன் நகை, செல்போன், 1500 ரூபாய் பணம் மற்றும் மற்றொரு பெண்ணிடமிருந்து 5.5 சவரன் நகை, ஐயாயிரம் பணம், செல்போன் ஆகியவற்றை அந்த நபர்கள் பறித்து சென்றதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கேரளா: நரபலி விவகாரத்தில் கைதான 3 பேருக்கு 12 நாட்கள் காவல்.. 26 பெண்கள் மாயமானதால் வலுக்கும் சந்தேகம்..!

இதனை, வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்ந்ததில், கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்பட்ட இருவர், சந்தோஷ் குமார் (24) மற்றும் மொனீஷ்குமார் (19) என்று தெரிய வந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசுக்கு திடுக்கிடும் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | எனக்கு கிடைக்காதவ ...யாருக்கும் கிடைக்க கூடாது...காதலனின் பரபரப்பு வாக்குமூலம்...!

நகையைப் பறித்து சென்றதாக பழி கூறி புகாரளித்த சுமித்ரா என்ற பெண் தான், தானே திட்டமிட்டு இந்த திருட்டை நடத்தியதாகவும், பொய்யாக புகாரளித்ததும் அம்பலமானது. மேலும் புகார் அளித்த சுமித்ராவின் நிஜ பெயர் ஷபானா என்பதும் அவர் வியாசர்பாடியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

இந்நிலையில், ஓ.எல்.எக்ஸில் பியூட்டிஷியன் மற்றும் மேக்கப் வேலைகளுக்கு பதிவு செய்யும் பெண்களை குறிவைத்து, சுமித்ரா, தீபிகா, நந்தினி என வெவ்வேறு பெயர்களில் தொலைபேசியில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது தெரியவந்தது.

மேலும் படிக்க | முறிந்த 5 வருட காதல்.. ரயில் முன் காதலியை தள்ளிவிட்ட காதலன்.. போலீசார் அதிரடி கைது.. தந்தை மரணம்..!

பின்னர் அதிக பணம் தருவதாக அப்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மசாஜ் செய்ய இளம்பெண்களை லாட்ஜிற்கு வரவழைப்பதும், அப்போது ஏற்கனவே  வாடிக்கையாளர் போல் தயார் நிலையில் இரண்டு ஆட்களை வைத்து, தீபிகா வேலைக்கு வரும் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

நகைப்பறித்ததும், மசாஜ் வேலைக்கு வந்த பாதிக்கப்பட்ட பெண்கள், போலீசில் புகாரளித்தால், மசாஜ் வேலைக்கு வந்ததும், பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் தெரிந்து விடும். இதனால் புகாரளிக்கக் கூடாது என மிரட்டல்களும் விடுத்துள்ளார் சுமித்ரா எனும் ஷபானா.

மேலும் படிக்க | அன்று நுங்கம்பாக்கம் சுவாதி.. இன்று மவுண்ட் சத்யா.. தொடரும் பெண் வதைகள்...

தற்போது பிடிப்பட்டது மட்டுமின்றி, ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், வடபழனி உள்ளிட்ட  இடங்களில் உள்ள லாட்ஜ்களில் மசாஜ் செய்ய வரும் பல பெண்களிடம் வழிப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த தகவலின் பேரில் கோயம்பேடு அருகே வைத்து ஷபானாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட ஷபானாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  ஷபானாவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும், பியூட்டிஷியன் மற்றும் மசாஜ் தொழிலில் கடந்த 5 வருடமாக இருந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | திடீரென மாயமான டாக்டர்... வலைவீசி தேடி வரும் போலீஸ்...

மேலும், சந்தோஷ் மடிபாக்கத்தில் சிட்பண்டில் பணியாற்றும் போது அவரது வாடிக்கையாளராக அறிமுகமாகி ச்கபானாவிற்கு நட்பு ஏற்பட்டதாகவும், பின்னர் இருவருக்கும் நெருக்கம் ஏற்ப்பட்டு கள்ளகாதலாக மாறி கடந்த ஒரு வருடமாக கள்ள உறவில் இருந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, சந்தோஷ் மற்றும் ஷபானா ஆகிய இருவரும் சேர்ந்து திட்டமிட்டு இது போன்ற செயல்களில் கடந்த ஒரு வருடமாக ஈடுப்பட்டதாகவும், மற்ற இடங்களில் செல்ஃபோன் போன்ற பொருட்கள் மட்டுமே கிடைத்ததால் எளிதாக அந்த பெண்களை பயமுறுத்தி அனுப்பி விட்டதாகவும் விசாரணையில் அம்பலமானது.

மேலும் படிக்க | சென்னை: 17வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பம்.. ஆசிரியை கைது..!

ஆனால், தற்போது தாமாகவே வந்து சிக்கி கொண்டதாகவும் தெரிவிக்கும் ஷபானா, லாட்ஜ்களில் அறை எடுப்பதற்காக சுமித்ரா, நந்தினி, தீபிகா போன்ற பெயர்களில் போலியாக ஆதார் அட்டைகளை உருவாக்கி அவற்றை கொடுத்து அறை எடுத்து தங்குவதை வாடிக்கையாக வைத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஷபானாவிடம் இருந்து 4 சவரன் நகைகள்,  செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

பணம் சம்பாதிப்பதற்க்காக தவறான தொழிலில் ஈடுப்பட்டு பணம் சம்பாதிக்க நினைப் பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமைந்துள்ளது. மேலும் பணத்திற்கு ஆசைப்பட்டு செல்லும் பெண்கள் இது போன்ற நபர்களிடம் சிக்கி விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க | காதலி பிரிந்ததால் அப்பாவி மக்களை கொலை செய்த காவலர்...!!!

--- பூஜா ராமகிருஷ்ணன்