திடீரென மாயமான டாக்டர்... வலைவீசி தேடி வரும் போலீஸ்...

திடீரென மாயமான டாக்டர்... வலைவீசி தேடி வரும் போலீஸ்...

இளம் வயது டாக்டர் ஒருவர் மாயமாகியுள்ளார். இது குறித்து அவரது தந்தை சுசீந்திரம் போலீசில் புகாரளித்த நிலையில், போலீசார் மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
Published on

கன்னியாகுமரி: சுசீந்திரம் அருகே உள்ள கற்காடு ரோடு சிவாநகரை சேர்ந்தவர் நெல்சன் (வயது63). இவர் ரெயில்வே துறையில் பணிபு ரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் அனிஸ்கார்த்திகா (27). வெளிநாட்டில் எம். பி.பி.எஸ். மருத்துவ படிப்பு படித்தார்.

தற்போது நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத் துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று அனிஸ்கார்த்திகா நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை, பெற்றோர் அவரது செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர்.

ஆனால், செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்கள் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் தேடினர். ஆனால் அனிஸ் கார்த்திகா பற்றி எந்த தகவ லும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவரது இன்று தந்தை நெல்சன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாயி லெட்சுமி, சப்-இன்ஸ்பெக் டர் ராபர்ட் செல்வசிங் ஆகி யோர் வழக்குப்பதிவு செய்து மாயமான டாக்டரை தேடி வருகிறார்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com