13 நாட்களிலேயே தூக்குப்போட்டுக் கொண்ட புதுப்பெண்...

திருமணமாகி 134 நாட்களே ஆன நிலையில், புதுப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 நாட்களிலேயே தூக்குப்போட்டுக் கொண்ட புதுப்பெண்...

சென்னை | தண்டையார்பேட்டை தமிழர் நகரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் கௌரி ஆகியோரின் மகள் ரேகா (35) இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் வேலை செய்து வந்தார். இவருக்கும் சென்னை டி  நகர் கிரியப்பா தெருவை சேர்ந்த ராஜசேகரன் என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்து கடந்த 14ஆம் தேதி வடபழனி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ரேகா கணவர் வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் 19ஆம் தேதி தனது தாய் வீட்டிற்கு வந்து இங்கிருந்து வேலைக்கு போய் வந்து கொண்டு இருந்தார்  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மருமகன் ராஜசேகர் தனது மனைவியான ரேகாவை  அழைத்துச் செல்வதாக மாமனாருக்கு  தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க | இனி ஒரு தற்கொலை நடந்தாலும்...ஆளுநர்தான் காரணம்...அன்புமணி காட்டம்!

இதனால் மருமகன் வருகிறார் என்று தெரிந்ததும்  இவர்கள்   காலை மார்க்கெட்டுக்கு சென்று  சமையல் செய்வதற்காக கறி   மற்றும் மற்ற  காய்கறிகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது  வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது உள்ளே சென்று பார்த்தபோது  படுக்கை    அறையில் தனது மகள் ரேகா மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கிய நிலையில் இருப்பதை  கண்டு அதிர்ச்சி அடைந்து வயதான தம்பதியர்கள் சத்தம் போட்டுள்ளனர் 

அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து ரேகாவின் உடலை கீழே இறக்கி பார்த்தபோது இறந்து போனது தெரிய வந்தது உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர் ஆர்.கே. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மி...70ஆயிரம் பணத்தை இழந்த பெண் தற்கொலை...!

இது குறித்து வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்  கணவர் வருகிறார் என தெரிந்தவுடன் தனக்குத்தானே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது  திருமணம் ஆகி 13 நாட்கள் ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | கர்ப்பணி என்றும் பாராமல் மனைவியை வெட்டிய கணவன்...தடுக்க வந்த தாயுக்கும் சரமாறியான வெட்டு...