
சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 70ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த வடமாநில பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சூதாட்டத்தால் நேர்ந்த பலி:
ஒடிசா மாநிலத்தை சோ்ந்தவா் பந்தனா மஜ்கி. இவா் தனது கணவருடன் தென்காசி மாவட்டம் வேலாயுதபுரத்தில் வசித்து வந்தாா். இந்த பெண்ணுக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகபடியான ஈடுபாடு இருந்ததால், அவர் அடிக்கடி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பெண்ணின் சகோதரர் அவரது வங்கி கணக்குக்கு அவ்வப்போது பணம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், பந்தனா மஜ்கி அந்த பணம் முழுவதையும் சூதாட்டத்தில் இழந்துள்ளாா்.
இதன் காரணமாக கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பந்தனா மஜ்கி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமாகி 3 ஆண்டுகளான நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து RDO விசாரணை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் கூறப்படுகிறது.