இனி ஒரு தற்கொலை நடந்தாலும்...ஆளுநர்தான் காரணம்...அன்புமணி காட்டம்!

இனி ஒரு தற்கொலை நடந்தாலும்...ஆளுநர்தான் காரணம்...அன்புமணி காட்டம்!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் ஆளுநர் அரசியல் செய்யாமல் இன்றைக்குள் கையெழுத்திட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் கையெழுத்திட வேண்டும்:

நாகையில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டம் கொண்டு வந்தும், தமிழக ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயமற்றது என குற்றம்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு இன்று கடைசி நாள் என்பதால் ஆளுநர் இன்றுக்குள் கையெழுத்திட வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் ஆளுநர் அரசியல் செய்யாமல் தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆளுநரும் தமிழக முதல்வரும் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஆன்லைன் ரம்மி...70ஆயிரம் பணத்தை இழந்த பெண் தற்கொலை...!

ஆளுநரை விமர்சித்த அன்புமணி:

மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து இருப்பதாக வேதனை தெரிவித்த அன்புமணி, தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.