பதுங்கி இருந்த 6 பேர் கைது! அதிரடியில் போலீஸ்...

கடையநல்லூரில் வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கி இருந்த 6 பேர் கைது செய்து  போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பதுங்கி இருந்த 6 பேர் கைது! அதிரடியில் போலீஸ்...

தென்காசி: கடையநல்லூர் கிருஷ்ணாபுரம்  பருத்திவிலை தெருவில் சில நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சம் அடைந்து இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்.

உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் பொன்னரசுஅசோக் ஆகியோர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள்  மகேஷ்குமார்விஜயகுமார் மற்றும் காவலர்கள் பருத்திவிலை தெருவில் உள்ள வீடுகளை நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | 35 கைம்பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன்...வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்...!

அப்போது சரோஜா என்பவரது லைன் வீட்டை சோதனை செய்தபோது மாடியில் உள்ள ஒரு வீடு மட்டும் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சட்டவழி முறைகளை பின்பற்றி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

அந்த 6 பேரிடமும்  விசாரணை செய்ததில்

  • சேரன்மகாதேவி சங்கன்திரடு தெற்கு தெருவை சேர்ந்த முப்புடாதி ()

  • ஆறு (27),

  • நெட்டூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் சுரேஷ் கண்ணன் () நெட்டூர் கண்ணன்,

  • மேலசெவல் பகுதியைச் சேர்ந்த பிச்சையா என்பவரது மகன் லட்சுமணகாந்தன் () கருப்பசாமி,

  • ஊத்துமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் மாரிமுத்து,

  • அய்யனார் குளம் நடுத்தெருவை சேர்ந்த உக்கிரமசிங்கம் என்பவரது மகன்களான சூர்யா மற்றும் சத்யா என்றும்

மேற்படி நபர்கள் குற்றம் செய்யும் நோக்கத்துடன் கிருஷ்ணாபுரம் பருத்திவிளை தெருவில் வாடகை வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.

மேலும் படிக்க | விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியர்...விடாத லஞ்ச ஒழிப்புத்துறை!

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 6 பேர்கள் மீதும் கடையநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்ததில் மேற்படி முப்புடாதி () ஆறு என்பவருக்கு நெல்லை, தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் கொலை, கொலைமுயற்சி ஆயுதத்தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட 21 வழக்குகளும், சுரேஷ் கண்ணன் () நெட்டூர் கண்ணன் என்பவருக்கு நெல்லை, தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் கொலை, கொலைமுயற்சி ஆயுதத்தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட 27 வழக்குகளும், லட்சுமண காந்தன் என்பவருக்கு கொலை, கொலைமுயற்சி உட்பட 15 வழக்குகளும், மாரிமுத்து என்பவருக்கு கொலை, திருட்டு, கஞ்சா உட்பட 10 வழக்குகளும், சூர்யா என்பவருக்கு கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும், சத்யா என்பவருக்கு கொலை, கொலை முயற்சி உட்பட 9 வழக்குகளும் உள்ளது என தெரியவந்தது.

மேலும் படிக்க | தமிழிசைக்கு நாவடக்கம் தேவை..! புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆவேசம்..!

மேலும் இது சம்பந்தமாக கடையநல்லூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 பேரை  காவல்துறையினர் சுற்றி வளைத்து சினிமா பாணியில் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | தெரியாமல் செய்து விட்டேன்..! பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு நூதன நிபந்தனை ஜாமின் !