தமிழிசைக்கு நாவடக்கம் தேவை..! புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆவேசம்..!

தமிழிசைக்கு நாவடக்கம் தேவை..! புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆவேசம்..!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு நாடாவாக்கம் தேவை என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.

பாஜக - என்.ஆர்.காங்கிரஸ்:

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அண்மையில் புதுச்சேரி மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது.

தனியாருக்கு மின்சாரம்:

தொடர்ந்து மின்சார வினியோகத்தை 100 சதவிகிதம் தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் அறிவிப்பினை புதுச்சேரி அரசு வெளியிட்டது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செப்.28ம் தேதி முதல் பணிகளை புறக்கணித்து மின்வாரி ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: இரவிலும் தொடர்ந்த போராட்டம்... 300க்கும் மேபட்டவர்கள் கைது...

கலவர பூமி:

இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரி மாநிலம் கடந்த சில தினங்களாக கலவர பூமியாக மாறியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனியார்மயமாக்க டெண்டர் விட்டுள்ளதை கண்டித்து, புதுச்சேரியில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் நிலவி வருகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தற்போது புதுச்சேரியில் துணை ராணுவத்தை இறக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், முதலமைச்சருக்கு தெரியாமலே இந்த தனியார் மயத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

நாவடக்கம் தேவை:

துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு நாவடக்கம் தேவை. அவர் பாஜகவின் ஏஜெண்டாகவே செயல்பட்டு வருகிறார். புதுச்சேரி மாநிலத்தை பற்றி கவலை இல்லாத கூட்டணியாகவும், மக்களை வஞ்சிக்கும் கூட்டணியாக என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி உள்ளது என்று நாராயணசாமி விமர்சித்தார்.