தெரியாமல் செய்து விட்டேன்..! பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு நூதன நிபந்தனை ஜாமின் !

தெரியாமல் செய்து விட்டேன்..! பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு நூதன நிபந்தனை ஜாமின் !

பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஹைதராபத் இளைஞருக்கு நூதன நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்.

வைரல் வீடியோ:

கடந்த மாதம் 8ஆம் தேதி அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக  பைக் சாகசத்தில் ஒருவர் ஈடுபட்ட வீடியோ வைரலானது. இந்த வீடியோ தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஹாரிஸ், முகமது சைபான் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

யூடியூப் பிரபலம் :

இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹைதரபாத்தை சேர்ந்த யூடியூப் பிரபலம் கோட்லா அலெக்ஸ் பினோய் பைக் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இன்ஸ்டாகிராமில் இவருக்கு 14 ஆயிரம் பாலோயர்ஸ் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும் பைக் சாகசத்தில் ஈடுபட பயன்படுத்தியது இவரது நண்பர் வாகனம் என்பது தெரியவந்ததையடுத்து வண்டி எண்ணை வைத்து ஹைதரபாத்தில் இருந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

இதையும் படிக்க: களத்தில் மோதிய பரம எதிரிகள்.. 127 பேரின் உயிரை காவு வாங்கிய கலவரம்..! விளையாட்டு வினை ஆவது இது தானா?

முன் ஜாமீன்:

இந்த வழக்கில் தொடர்புடைய 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முக்கிய நபரான பினோய் மட்டும்  தலைமறைவான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

நூதன நிபந்தனை:

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜகதீஷ் சந்திரா நூதன நிபந்தனை ஒன்றை வழங்கி உள்ளார். பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

சரியான பாடம்:

குறிப்பாக மூன்று வாரங்களுக்கு திங்கள்கிழமை காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரையும் மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரையும் விழிப்புணர்வு பிரசுரங்களை தேனாம்பேட்டை சிக்னலில் வழங்க வேண்டும், செவ்வாய் முதல் சனிக்கிழமை ஆகிய ஐந்து நாட்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் வார்ட் பாயாக தினமும் காலை எட்டு மணி முதல் 12 மணி வரை 4 மணி நேரம் பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இனி எப்படி செய்யமாட்டேன்:

அதனடிப்படையில் இன்று காலை  பினோய் அண்ணா அறிவலயம் அருகே உள்ள சிக்னலில் வாகன ஓட்டிகளிடம்  விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். மேலும் தெரியாமல் பைசாசங்களில் ஈடுபட்டு விட்டதாகவும் இனிமேல் இது போன்ற தவறை செய்ய மாட்டேன் எனவும் மன்னிப்பு கூறினார்.