வேலைக்கு சென்ற பெண் வீடு திரும்பவில்லை!!! காரணம் வடமாநில தொழிலாளி!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று திரும்பிய பெண் தொழிலாளியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

வேலைக்கு சென்ற பெண் வீடு திரும்பவில்லை!!! காரணம் வடமாநில தொழிலாளி!!!

ஊதியூர் அருகே நிழலி கிராமம், வஞ்சிபாளையம், கரியாக்கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தனசாமி. இவரது மனைவி ரேவதி(35). இவர்களுக்கு 8 வயதில் ஹரிஷ் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் கரியாக்கவுண்டன் புதூரில் வசித்து வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ரேவதியின் கணவர் ரத்தினசாமி,  எழுந்து நடப்பதற்கு கூட சிரமப்படுவதால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் ரேவதி தனது பகுதிக்கு அருகில் உள்ள வஞ்சிபாளையத்தில் ஒரு தனியார் பனியன் கம்பெனிக்கு கடந்த 4 வருடங்களாக வேலைக்கு சென்று வந்துள்ளார்.

மேலும் படிக்க | நடிகையின் செல்போன் எண்ணைக்கேட்டு கேமராமேனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்...!

வேலை முடிந்து தனது வீட்டிற்கு செல்வதற்கு ரேவதி காட்டுப்பாதை வழியாக நடந்து வருவது வழக்கம். கடந்த 10ம் தேதி காலை வழக்கம் போல கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். மாலை 3 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில் ரேவதி வீட்டுக்கு வந்துசேரவில்லை.

இது குறித்து ரத்தினசாமி  ரேவதியின் குடும்பத்தினருக்கு போன் செய்து விசாரித்தபோது அங்கேயும் வரவில்லை என்ற தகவல் கிடைத்தது.  ரேவதியின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் நேற்றுமுன்தினம் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் வேலை முடிந்து நடந்து வரும் காட்டுவழிப் பாதையில் சென்று பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க | தலை மேல் கல்லைப் போட்டு பெண்ணைப் படுகொலை!!!

காட்டுவழிப் பாதையில் கண்ணாங்காட்டு தோட்டம் பகுதியில் வரும் போது ரேவதியின் மதிய உணவு பை மற்றும் ரேவதியின் செருப்பு ஆகியவை கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவதியின் உறவினர்கள் அப்பகுதியில் சுற்றி பார்த்தனர். அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி கிளை வாய்க்கால் கரையோரம் உள்ள ஒரு முட்புதர் அருகே ரேவதியின் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ஊதியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | சாவித்திரி கண்ணன் கைது...யாரை காப்பாற்றுவதற்காக? சீமான் கண்டனம்!

இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, குற்றவாளியை  தேடி வந்தனர்.

கொலையாளியை பிடிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி.சசாங் சாய் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது தனி படை போலீசார் ரேவதி பணியாற்றிய பனியன் கம்பெனியில் இருந்து அவர் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற நேரம், அவர் சென்ற பாதை குறித்து ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.

மேலும் படிக்க | சொத்துக்காக தம்பி மனைவியை கொலை செய்த அண்ணன்...!

அதில் சம்பவம் நடந்த பகுதியில், குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வடமாநில வாலிபர் சென்று வரும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த வாலிபர் குறித்து விசாரிக்கும் போது அவர் பீகார் மாநிலம் மிர்சாபூர் தாலூக்கா நந்தன்பூர் பகுதியைச் சேர்ந்த உமேஷ்ரிஷிதேவ், 41, என்பதும் அங்குள்ள ஒரு தனியார் ரைஸ் மில்லில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மில்லுக்கு போலீசார் சென்று விசாரித்த போது, அவர் வேலைக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.

பின்னர் மில் அருகில் அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு பதுங்கி இருப்பது தெரியவந்தது. உமேஷ்ரிஷிதேவை போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் ரேவதி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ரேவதி வேலை முடிந்து தினமும் வீட்டிற்கு நடந்து செல்வார். அவர் செல்லும் பகுதி காட்டுப்பகுதி.

மேலும் படிக்க | திருமணமான ஐந்தே நாளில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... !

அங்கு ஆள் நடமாட்டம் இருக்காது. இதனை உமேஷ்ரிஷிதேவ் நோட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று ரேவதி தனியாக செல்வதை அறிந்து பின் தொடர்ந்து சென்ற உமேஷ்ரிஷிதேவ் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேவதியை வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளார். அவர் சத்தம் போடவே அருகில் இருந்த கல்லால் ரேவதியின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் ரேவதி மயங்கினார். அந்த நேரத்தில் வடமாநில வாலிபர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். சிறிது நேரத்தில் ரேவதி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் உமேஷ்ரிஷிதேவ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். போலீஸ் தேடுதல் வேட்டையில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து உமேஷ்ரிஷிதேவை போலீசார் கைது செய்து, காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

மேலும் படிக்க | மகளை பாலியல் வன்கொடுமை செய்து குழந்தைப் பெற்ற தந்தை கைது!!!