பொறி வைத்துப் பிடித்து 8 மணி நேரம் விடிய விடிய விசாரணை...

புதிய மின் இணைப்பு வழங்க ரூ.10,000/- வஞ்சம் வாங்கிய சென்னை, நொளம்பூர், முகப்பேர் மேற்கு மின் வாரிய அலுவலகத்தை சேர்ந்த இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய 8 மணி நேரம் விசாரண பிறகு கைது செய்தனர்.

பொறி வைத்துப் பிடித்து 8 மணி நேரம் விடிய விடிய விசாரணை...

சென்னை : திரு.விவேக் குமார் என்பவர், 3வது பிளாக், முகப்பேர் மேற்கில் உள்ள தன்னுடைய தாயரின் வீட்டின் 2வது தளத்தில் உள்ள கட்டிடத்திற்கு புதிதாக சிங்கில் ஃபேஸ் கூடுதல் மின் இணைப்பு வேண்டி 26.10.2022 தேதியன்று ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார்.

மறுநாள் (27.10.2022) மின் இணைப்பிற்கு வேண்டிய அனைத்து ஆவணங்களுடன் நொளம்பூர், முகப்பேர் மேற்கு மின் வாரிய அலுவலகம் சென்று மின் இணைப்பு வழங்கும் பொறுப்பு அதிகாரியான இளநிலை பொறியாளர் திரு.கோதண்டராமன் அவர்களை சந்தித்து, ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

மேலும் படிக்க | மனைவியை கொன்று விட்டு...நீலிக்கண்ணீர் வடித்த கணவன்...கொடுத்த வாக்குமூலம் என்ன?

ஆவணங்களை சரிபார்த்து, ஆன்லைனில் இணைப்புக்கு வேண்டிய அரசாங்க கட்டணத்தை செலுத்திவிடுமாறும், தனக்கு லஞ்சமாக ரூ.10,000/-ம் தந்துவிட வேண்டுமென்று கூறியுள்ளார்.மேலும், 02.11.2022- தேதி ஆன்லைனில் இணைப்புக்கு உண்டான கட்டணத்தொகையை செலுத்தியவுடன் மறுநாள் 03.11.2022 தேதியன்று திரு.கோதண்டராமன் மற்றும் உடன் ஒருவரும் புகார்தாரரின் வீட்டை இணைப்புக்காக ஆய்வு செய்ததாகக் கூறபடுகிறது.

மேலும் படிக்க | தவறான பாதையில் அதிவேகமாக சென்ற வேன்...! ஒருவர் பலி...! ஓட்டுனர் கைது..!

ஆனால், ஆய்வு செய்து 5 நாட்களாகியும் எந்த மின் இணைப்பும் தராததால் புகார்தாரர் 08.11.2022 தேதியன்று கோதண்டராமனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்ததாகவும் அப்போது அவர் 2 நாட்களுக்குள் அவர் கேட்ட ரூ.10,000/- லஞ்சப் பணத்தை கொடுத்தால் தான் இணைப்பு கிடைக்கும் என்று கராறாக தெரிவித்ததாக தன்னுடைய புகாரில் ஆலந்தூரில் செயல்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், கோதண்டராமனைப் பற்றிய இரகசிய விசாரணை செய்த ஆய்வாளர் இன்று 14.11.2022 தேதி இது மாலை 6 மணிக்கு V&AC, Chennai City-II, Cr.No.10/AC/2022/CC-II, u/s 7 of PC (Amendment) Act 2018 ல் வழக்கு பதிவு செய்து எதிரியை பிடிக்க பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் படிக்க | பேருந்தில் சிக்கி, தலை நசுங்கி... உயிரிழந்த பதற வைக்கும் சம்பவம்...

பொறிவைப்பு நடவடிக்கையின் போது எதிரி புகார்தாரரை முகப்பேர் ரோட்டில் உள்ள நொளம்பூர் V-7 காவல் நிலைய அவுட் போஸ்ட் அருகில் வரச்சொல்லி லஞ்ச பணத்தை கேட்டதாகவும், அப்போது  அவரிடமிருந்த ரூ.10,000-த்தை எடுத்துக்கொடுத்தவுடன் எதிரி அதனை வாங்கி எண்ணிப்பார்த்து வைத்துக்கொண்டார்.

இதனை மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த பொறிவைப்பு அதிகாரி அரசு சாட்சிகளின் முன்னிலையில் எதிரி லஞ்சப்பணம் வாங்கியிருந்ததை உறுதி செய்த பின்னர் கையும்களவுமாக கைது செய்து எதிரியிடமிருந்து லஞ்ச பணம் மீட்கப்பட்டது.

மேலும் படிக்க | 20 வருடங்கள் திருட்டு இல்லாத நங்கநல்லூரில் நகை, பணம் கொள்ளை...

பின், புலன் விசாரணைக்கு தொடர்பாக புகார்தாரர் மின் இணைப்புக்கு வேண்டிய ஆவணங்களின் நகல்கள் எதிரியின் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டு எதிரியின் கைது பற்றி அவருடைய உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, எந்த இடத்தில் லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டாரோ அதே இடத்தில் இருக்க கூடிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டுப்பாட்டில் விடிய விடிய 8 மணி நேரம் விசாரணைக்கு பிறகு  வழக்கு பதிவு செய்து எதிரியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்க | உண்டியல் திருட்டின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள்...