20 வருடங்கள் திருட்டு இல்லாத நங்கநல்லூரில் நகை, பணம் கொள்ளை...

சென்னை நங்கநல்லூரில் ஐ.டி ஊழியர் வீட்டில் 34 சவரன் தங்கநகை, 25 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
20 வருடங்கள் திருட்டு இல்லாத நங்கநல்லூரில் நகை, பணம் கொள்ளை...
Published on
Updated on
1 min read

சென்னை : 20 வருடங்களாக நங்கநல்லூர் லட்சுமி நகர் பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் முதல் முறையாக திருட்டு நடந்துள்ளதால், அப்பகுதியே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

நங்கநல்லூர் லட்சுமி நகர், பகுதியில்  குடும்பத்துடன் வசித்து வருபவர், கணேஷ். இவர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கணேஷ் குடும்பத்துடன் கடந்த 10,தேதி தஞ்சாவூருக்கு சென்று உள்ளார்.இதையடுத்து இன்று தஞ்சாவூரில் இருந்து வீட்டிற்கு வந்த கணேஷ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் லாக்கர் உடைக்கப்பட்டு 33 சவரன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக கணேஷ் பழவந்தாங்கல் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 20 வருடங்களாக நங்கநல்லூர் லட்சுமி நகர் பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் முதல் முறையாக திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com