சர்ப்ரைஸ் கொடுக்க சென்ற காதலன் பார்சல் கட்டிய கள்ளக்காதல் ஜோடி...

கணவனுக்கு தெரியாமல், முதல் காதலனுடன் இரண்டாம் காதலனின் கொலையில் ஈடுபட்ட பெண்ணால், நெல்லையே அதிர்ந்து போயுள்ளது.

சர்ப்ரைஸ் கொடுக்க சென்ற காதலன் பார்சல் கட்டிய கள்ளக்காதல் ஜோடி...

திருநெல்வேலி | நரசிங்கநல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் செல்வி. 56 வயதான இவர் அபிஷேகப்பட்டியைச் சேர்ந்த ஜேக்கப் ஆனந்தன் என்பவரிடம் கட்டிட கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது 67 வயதான ஜேக்கப் ஆனந்தனுக்கும் செல்விக்கும் தொடர்பு உண்டானதைத் தொடர்ந்து அடிக்கடி சந்திந்து வந்தனர். 

கட்டிடக் காண்ட்ராக்டரான ஜேக்கப் ஆனந்தனுக்கு 2 திருமணமான மகன்கள் உள்ள நிலையில் செல்வியுடன் தகாத உறவு கொண்டிருந்தார். ஆனால் ஆனந்தன் பார்வை செல்வியின் 22 வயது மகள் தேவியின் மீதும் விழுந்தது. திருமணமாகியும் கணவரை பிரிந்து வாழ்ந்த தேவி, அனந்தின் பாசத்தில் மயங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தாயை விட்டு மகள் பக்கம் சாய்ந்தார் ஆனந்தன்.

மேலும் படிக்க | 13 நாட்களிலேயே தூக்குப்போட்டுக் கொண்ட புதுப்பெண்...

ஆனால், இது மட்டுமல்ல, இது மேலும் ஒரு காதலாக தான் இருந்திருந்தது. ஏன் என்றால் தேவிக்கு ப்ரின்ஸ் என்ற ஒருவருடன் தேவி தொடர்ப்பில் இருந்திருக்கிறார். கணவன் இன்றி இருக்கும் தேவி, ஆனந்தன் மற்றும் ப்ரின்ஸ் இருவருடனுமே தொடர்பில் இருந்தது தாண்டி அவரது கதை ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் வழக்கம் போல தேவியை பார்க்க முன்னறிவிப்பு இன்றி, சென்ற ஆனந்தனை எதிர்பாராத தேவி, ப்ரின்ஸ் பயந்து போகினர். பின், ப்ரின்சை சமையலறைக்குள் ஒளித்து வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல கதவை திறந்து ஆனந்தனை வரவேற்றார். மேலும் ஜேக்கப்பை முன்பின் தெரியாதவர் போல தேவி பேச ஆரம்பிக்க, சந்தேகம் அடைந்த ஜேக்கப் சமையலறைக்கு சென்று பார்த்தபோது ப்ரின்ஸ் ஒளிந்திருப்பதைக் கண்டு சத்தம் போட்டார். இந்த வாக்குவாதத்தில் ப்ரின்ஸ் தாக்கியதில் ஜேக்கப் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.  

மேலும் படிக்க | அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து விபத்து...

உயிரிழந்த ஜேக்கப் ஆனந்தனின் உடலை காரில் தூக்கி போட்டுக் கொண்டு சுத்தமல்லியில் உள்ள குளக்கரையில் தேவியும், ப்ரின்சும் தூக்கி வீசினர். பின்னர் அங்கிருந்து மதுரைக்கு சென்ற பிரின்ஸ், ஜேக்கப் ஆனந்தனின் மனைவிக்கு போன் செய்து உங்கள் கணவரை கடத்தி வைத்துள்ளோம்.. 10 லட்சம் ரூபாய் தந்தால்தான் உயிருடன் விடுவோம் என கடத்தல் நாடகமாடினார். அதற்குள் சுத்தமல்லி குளக்கரையில் ஆனந்தனின் உடல் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. 

ஜேக்கப் ஆனந்தனை கொலை செய்து விட்டு கடத்தியது போல நாடகமாடி போலீசாரை திசை திருப்பிய  பிரின்ஸை நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் வைத்து கையும் களவுமாக பிடித்தனர். அதே போல எதுவுமே நடக்காதது போல வீட்டில் ஜாலியாக இருந்த தேவியையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | பெற்ற குழந்தையை காலால் தூக்கி, அடித்தே கொலை செய்த கொடூர தந்தை...