அத்துமீறி நடந்ததாக ஆட்டோ டிரைவர் கைது! உண்மையா அல்லது பொய் புகாரா?

ஆட்டோ ஓட்டுனர் சவாரியின்போது அத்துமீறி நடந்துகொண்டதாக இளம்பெண் புகார் அளித்ததை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் அளித்த தகவல்கள் நம்பகத்தன்மையாக இல்லை.

அத்துமீறி நடந்ததாக ஆட்டோ டிரைவர் கைது! உண்மையா அல்லது பொய் புகாரா?

சென்னை சோழிங்கநல்லூரில், பிரபல் டாக்சி சேவை நிறுவனமான ‘உபர்’ மூல பதிவு செய்யப்பட்ட ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறி நடந்துகொண்டதாக அந்த பெண் நேற்றிரவு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

மேலும் படிக்க | வீடியோவில் இருந்தால் நிரூபிக்க படாது!- சிறுமியின் வைரல் வீடியோ குறித்து காவலர்கள் கருத்து!

சென்னை தரமணியில் உள்ள தனியார் கல்லூரியில் பத்திரிகையாளராக படித்து வரும் பெண், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். நேற்றிரவு தனது தோழி ஒருவருடன் ஈ.சி.ஆரிலிருந்து தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு ஆட்டோ பதிவு செய்து ஹோட்டலுக்கு வந்ததாக தெரிவித்துள்ள நிலையில், ஹோட்டலுக்கு வந்ததும், இறங்கும் போது ஓட்டுநர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் தொல்லை அளித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க | சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்...! கைது செய்த போலீசார்..!

இரவு புகார் கொடுத்த அந்த இளம்பெண் இதுகுறித்து அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தது வைரலானது. இதனைத் தொடர்ந்து செம்மஞ்சேரி காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் படிக்க | சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பெரியப்பா..! அதிரடியாக போக்சோவில் கைது செய்த போலீசார்..!

விசாரணையின் போது, ஆட்டோ ஓட்டுநர் தன்னை பதிவு செய்த போது, தன்னிடம் ஓன்லை பேமண்ட் முறைகள் இல்லை என்றும், பணமாக கட்டணம் செலுத்த கூறியும் கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டது. அதர்கு ஒப்புக் கொண்ட பெண்கள், ஹோட்டலுக்கு வந்ததும், பணம் கொடுக்க மறுத்து ஆன்லைன் வழி தான் பணம் செலுத்த முடியும் என அடம்பிடித்தது மட்டுமின்றி, ஓட்டுநரின் போனை பிடுங்கி, அதில் ஓன்லைன் பேமண்ட் செயலிகள் இருக்கின்றனவா என ஆராய்ந்துள்ளனர்.

மேலும் படிக்க | சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்...! 8 ஆண்டுகள் சிறை..!

ஓட்டுநரின் அனுமதியின்றி பிடுங்கி அவரது போனை ஆராய்ந்ததை எதிர்த்து பேசி, தனது போனை மீட்க முயன்ற போது, அந்த பெண்ணின் தோள்பட்டை மீது தனது கை தெரியாமல் பட்டதாக ஆட்டோ ஓட்டுநர் கூறினார். ஒரு பக்கம் இப்படி இருக்க, சம்பவ இடத்தில் நடந்தவற்றை பற்றி தெரிந்து கொள்ள போலீசார் சம்பவ இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகாலி ஆராய்ந்துள்ளனர். அதில் மேலும் சந்தேகத்திற்குரிய செயல்கள் நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | உத்திரபிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை...முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

சம்பவம் குறித்து சோசியல் மீடியாக்களில் பதிவிட்டிருந்த அந்த பெண், தன்னை ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அந்த நேரத்தில் பயந்து தன்னை காப்பாற்றுமாறு கதறிய போது தன்னைக் காப்பாற்ற யாரும் அங்கு வரவில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், சிசிடிவி காட்சிகளில், முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி இறங்கி, சில விநாடிகள் அந்த பெண் ஆட்டோ உள்ளேயே இருந்திருக்கிறார்.

மேலும் படிக்க | “வெளிய சொன்னா...”- பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டிய ஆசிரியர் கைது!!!

பின், திடீரென இறங்கிய புகாரளித்த பெண் தனது தோழியிடம் புகாரளிக்கும் காட்சிகள் இருக்கின்றன. ஆனால், அவர் கூறியதற்கு மாறாக, அவர் தோழியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, அடுத்தடுத்து ஏராளமானோர் அங்கு குவிந்தது சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகி இருக்கிறது.

மேலும் படிக்க | ஆபாச பாடம் நடத்திய குற்றச்சாட்டுக்கு ஆசிரியர் போக்சோ பிரிவில் கைது!!!

தற்போது குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மீது 394A என்ற பிரிவீன் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருப்பினும் இந்த புகார் உண்மையானதா அல்ல, உண்மையில் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.