உத்திரபிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை...முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

உத்திரபிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை...முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

உத்தரப்பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பட்டியலின மாணவி, பரிதாபமாக உயிரிழந்தார்.

பிலிபிட் மாவட்டத்தில் உள்ள குன்வார்பூர் கிராமத்தில், பட்டியலின மாணவியை இருவர் சேர்ந்து வீடுபுகுந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து அவரைக் கொல்லும் நோக்கில் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: அதிமுக ஆட்சியில் அடித்த ஷாக்...ஸ்டாலினுக்கு இப்போ அடிக்கவில்லையா?

பின்னர் விவசாயப் பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய தந்தை, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தன் மகளைக் கண்டு கதறியழுது அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்தார்.

தொடர்ந்து 80 சதவீத தீக்காயங்களுடன் லக்னோ அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டார். ஆனால் 12 நாட்களுக்குப்பின், சிகிச்சைப் பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.