அதிமுக ஆட்சியில் அடித்த ஷாக்...ஸ்டாலினுக்கு இப்போ அடிக்கவில்லையா? 

அதிமுக ஆட்சியில் அடித்த ஷாக்...ஸ்டாலினுக்கு இப்போ அடிக்கவில்லையா? 

பெண்களுக்காக மதுபானக் கூடம் அமைத்த ஒரே கட்சி திமுக தான் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்:

கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி பகுதியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழகச் செயலாளரும் ஆன எம். ஆர் விஜயபாஸ்கர்,  பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் நிகழ்ந்த மின்கட்டண உயர்வு குறித்தும், டாஸ்மார்க் கடை குறித்தும்   விமர்சித்து பேசினார்.

டாஸ்மார்க் கடை இருப்பது தெரியவில்லையா?:

கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அரசு, டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் என கையில் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அதே அரசு தற்பொழுது ஆளும் கட்சியில் இருக்கும்போது, டாஸ்மார்க் கடைகள் இருப்பது தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பி பேசினார். 

பெண்களுக்கு டாஸ்மார்க் வைத்த ஒரே கட்சி திமுக:

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில்  டூப்ளிகேட் மதுபானங்கள்  ஆறாக ஓடுகின்றது. அதுமட்டுமல்லாமல் இரவு 10 மணிக்கு மேல் விற்கப்படும் மதுபானங்கள் அனைத்தும் டூப்ளிகேட் தான். இதுதான் திமுக அரசின் சாதனை என்று பேசினார். அதேசமயம், பெண்களுக்காக மதுபானக் கூடம் அமைத்த ஒரே கட்சி திமுக தான். தேர்தல் பிரசாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுகவினர் நடத்தும் அனைத்து மதுபான ஆலைகளும் முடப்படும் எனக்கூறி வாக்கு சேகரித்தார் கனிமொழி. அவர் தற்போது எங்கே போனார்? என்று தெரியவில்லை என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிக்க: சர்ச்சையான ஆ.ராசாவின் பேச்சு...திமுக ஏன் கண்டிக்கவில்லை...வி.பி.துரைசாமி கேள்வி?

விண்ணை முட்டும் மின்கட்டண உயர்வு:

தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் தற்போழுது கரண்ட் கட் வந்துவிட்டதாக கூறினார். தென் மாவட்டங்களில் இயங்கக்கூடிய காற்றாலை உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அப்பகுதிகளில் மின்வெட்டு தற்பொழுது துவங்கி விட்டது. இதனைத்தொடர்ந்து வருகிற மே மாதம் முதல் அடிக்கடி பவர் கட் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதேசமயம், இந்த திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்டாலினுக்கு ஷாக் அடிக்கவில்லையா:

திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது மின் கட்டண உயர்வு சாக்கடிக்குது என கையில் பதாகையில் ஏந்தியவாறு போராட்டம் நடத்தினார். ஆனால், தற்பொழுது திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு விண்ணை எட்டியுள்ளது அவருக்கு சாக் அடிக்க வில்லையா? என்று கேள்வி எழுப்பி நிகழ்ச்சியில் எம். ஆர் விஜயபாஸ்கர் உரையாற்றினார். முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கரின் பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.