பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வாகனங்களை சேதப்படுத்திய 3 பேர் கைது!

பொள்ளாச்சியில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்படுள்ளனர். வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வாகனங்களை சேதப்படுத்திய 3 பேர் கைது!
Published on
Updated on
1 min read

பொள்ளாச்சி: குமரன் நகர் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளின் வீட்டின் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார் மற்றும் இரண்டு ஆட்டோ ஆகிய வாகனத்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியும்  வாகனங்களின் மீது டீசல் திரவத்தை ஊற்றியும் தீ வைக்க முயற்சி செய்தனர்.

இது தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை தேடும் பணியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் உத்தரவின் பேரில், 7 தனிப்படைகள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தினர்.

இதை தொடர்ந்து சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் 500 க்கும் மேற்பட்ட நபர்களின் அலைபேசி எண்களை ஆய்வு செய்தும் சந்தேக நபர்களை தொடந்து கண்காணித்து விசாரணை மேற்கொண்டதில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் பொள்ளாச்சியை சேர்ந்த முகம்மது ரபீக்ரமீஸ் ராஜா, மற்றும் மாலிக்()சாதிக் பாஷா ஆகிய மூவரையும் கைது

செய்த போலீசார் பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் படுத்தினர். குற்றம் சட்டப்படவர்களை விசாரித்த நீதிபதி மூன்று பேரையும் வரும் 30.09.22 தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com