மருமகளை கொலை செய்த மாமனார்.. ஆண் நண்பர்களுடன் நெருக்கம் காட்டியதால் நடந்த விபரீதம்..!

மனநலம் பாதிக்கப்பட்ட பையனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!

மருமகளை கொலை செய்த மாமனார்.. ஆண் நண்பர்களுடன் நெருக்கம் காட்டியதால் நடந்த விபரீதம்..!

மனநலம் பாதிக்கப்பட்ட நபர்:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள லாலாகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் இசக்கிராஜ். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இவரது முதல் மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார்.

இரண்டாவது திருமணம்:

அதனைத் தொடர்ந்து, இசக்கிராஜிற்கு தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பகுதியை சேர்ந்த பத்மாவதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.

ஆண் நண்பர்களுடன் நெருக்கம்:

இதனால் பத்மாவதி விரக்தி அடைந்து அவ்வப்போது கணவர் இசக்கிராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், பத்மாவதி, வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு சில ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

மருமகளை கொலை செய்த மருமகன்:

இது குறித்து தெரிந்து கொண்ட இசக்கிராஜின் தந்தையான முருகேசன் பத்மாவதியை கண்டித்துள்ளார். ஆனால், பத்மாவதி கேட்காததால் ஆத்திரமடைந்த முருகேசன், வீட்டில் பத்மாவதி தனியாக இருந்த போது, அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.  

இதையும் படிங்க: பத்திரிக்கை உலகின் புரட்சியாளர்..!

போலீசார் விசாரணை:

பத்மாவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, பத்மாவதி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு புளியரை போலீசார் விரைந்து வந்து பத்மாவதி உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாமனார் கைது:

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பத்மாவதியை கொலை செய்த முருகேசனை கைது செய்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.