சென்னை | கொடுங்கையூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று கொடுங்கையூர் போலீசார் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் ஆறாவது பிளாக் 153வது தெருவில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்களிடம் சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் 23 வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஆகாஷ் 21 எம் கே பி நகர் பகுதியை சேர்ந்த சத்ய நாராயணன் 23 என்பது தெரிய வந்தது.
இவர்கள் மூன்று பேரும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து ஆந்திராவுக்கு சென்று ஐந்து கிலோ கஞ்சாவை வாங்கி வந்து அதனை சிறு சிறு பெட்டலங்களாக பிரித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை யடுத்து இவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | போராட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு...