போதை பொருளால் தனி மனிதன் மட்டுமல்லாமல், சமூகமும் பாதிக்கிறது - நீதிமன்றம் வேதனை!

போதை பொருளால் தனி மனிதன் மட்டுமல்லாமல், சமூகமும் பாதிக்கிறது - நீதிமன்றம் வேதனை!

போதை பொருளால் தனி மனிதன் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், சமூகமும் பாதிக்கப்படுவதாக போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 

ஆந்திராவிலிருந்து  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில், விசாகப்பட்டினத்தை சேர்ந்த பூர்ண சந்திர பாங்கி என்பவர் 24 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த போது, சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 

இதையும் படிக்க : நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெறுவோம்... சூளுரைத்த சசிகலா!

இதனைத்தொடர்ந்து குற்றவாளிக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா, குற்றம் சாட்டப்பட்ட பூர்ண சந்திர பாங்கிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. 

மேலும் அந்த உத்தரவில், போதை பொருள் பழக்கத்தால், வாழ்க்கையின் அடிப்படை செயல்பாடுகளை இழக்க நேரிடுவதாகவும், அதற்கு அடிமையாவோர் எதிலும் நாட்டமின்றி சுய உணர்வை இழக்கின்றனர் எனவும் நீதிபதி கவலை தெரிவித்தார். போதை பொருளால் தனி மனிதன் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், சமூகமும் பாதிக்கப்படுவதாக போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.