4 வயது சிறுமி மர்ம மரணம்... சித்ரவதை செய்யப்பட்டாரா?

தனக்கு பிறந்த குழந்தை இன்னொருவரால் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் உடலில் சூடு வைத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 வயது சிறுமி மர்ம மரணம்...  சித்ரவதை செய்யப்பட்டாரா?

திருப்பூர் : பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். 30 வயதான இவருக்கும், கவுரி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்து இவர்களுக்கு ஷிவானி என்ற பெண் குழந்தை பிறந்தது. 

குழந்தையின் மீது அதிக பாசம் வைத்து வளர்த்து வந்த பிரகாசும் கவுரியும், திருப்பூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த கீர்த்திகா என்ற பெண்ணும் அதே மில்லில் வேலை பார்த்து வந்தார். 

மேலும் படிக்க | ஆயிரம் பவுன் நகையை ஆட்டையை போட்ட அடகுக்கடை நிறுவனம்...

கவுரியும், கீர்த்திகாவும் வேலை நிமித்தமாக பேசிப் பழகி உற்ற தோழிகளாயினர். 32 வயதான கீர்த்திகாவுக்கு ராஜேஷ்குமாருடன் 10 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந்து முடிந்திருந்தாலும் இதுவரை குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். 

மில்லில் ஏற்பட்ட திடீர் நட்பு:

கவுரியை சந்திக்க வந்த கீர்த்திகா, 4 வயது சிறுமியான ஷிவானியை மிகவும் பாசம் வைத்து கொஞ்சி வந்துள்ளார். துருதுருவென துள்ளித்திரிந்த ஷிவானியின் குழந்தைத் தன்மைக்கு அடிமையான ஷிவானியை வளர்க்க வேண்டும் என்கிற ஆசையும் கீர்த்திகாவின் மனதில் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | கரடி தாக்கி மூவர் படுகாயம்... ஒருவருக்கு முக உறுப்புகள் முழுவதுமாக இழப்பு...

இதற்காக கணவர் ராஜேஷ்குமாரிடம் தெரிவித்ததையடுத்து, அவர் கவுரியின் கணவர் பிரகாஷிடம் குழந்தையை வளர்ப்பதற்கு கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ், குழந்தையை தங்களிடம் ஒப்படைப்பதில் முழு மனது இல்லையென்றாலும், ஒரு 10 நாளைக்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறியிருக்கிறார்.

தோழி மீது இரக்கம்:

அதே நேரம், கவுரியின் மனதில் கணவன் மனைவி இருவருமே மில் வேலைக்கு செல்கிறோம். இதனால் குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் சிரமமாக இருப்பதன் காரணமாக குழந்தையை கீர்த்திகாவுடன் அனுப்புவதற்கு சம்மதித்ததுள்ளார். எனவே, கடந்த 10 நாட்களுக்கு முன் ராஜேஷ்குமாரும் கீர்த்திகாவும் திருப்பூர் பல்லடத்தில் இருந்து 4 வயது சிறுமி ஷிவானி அழைத்துக் கொண்டு வடமதுரை சென்றனர். 

மேலும் படிக்க |  மகளையே கொலை செய்த தந்தை.. வீடியோ வெளியிட்ட பகீர் சம்பவம்..!

திடீர் மரணத்தால் அதிர்ச்சி:

இந்த நிலையில் திடீரென போன் செய்த ராஜேஷ்குமார், தங்கள் மகள் ஷிவானி திடீரென பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகவும, உடனே பார்க்க வருமாறும் கூறினார். இதைக் கேட்ட பிரகாசும் கவுரியும் பதறியடித்தபடி வடமதுரைக்கு சென்று பார்த்தால் 4 வயது சிறுமியான ஷிவானி பரிதாபமாக உயிரிழந்திருந்தார். 

மர்ம முறையில் மரணம்:

தங்கள் மகளின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக ஊகித்த சிறுமியின் பெற்றோர்  வடமதுரை போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். சிறுமி பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கூறும் நிலையில் உடலில் சூடு வைத்ததற்கான அடையாளங்களும் தென்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மின்சாரம் தாக்கி கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு...

இதனால் சிறுமி சித்ரவதை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்ற ரீதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

குழந்தை இல்லாத தம்பதிகளிடம் தான் பெற்ற குழந்தையை கொடுத்து அவர்களுக்கு நிம்மதி அளிக்க நினைத்தவர்கள், தற்போது குழந்தையின் மரணத்தால் நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க |  இப்படி ஏமாத்தீட்டியே.. நல்லா இருப்பியா? நமீதா முன்பு பொங்கிய பெண்...