மகளையே கொலை செய்த தந்தை.. வீடியோ வெளியிட்ட பகீர் சம்பவம்..!

மகளையே கொலை செய்த தந்தை.. வீடியோ வெளியிட்ட பகீர் சம்பவம்..!

ஆந்திராவில் மகளையே கொலை செய்து விட்டு வீடியோ வெளியிட்ட தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Published on

முதல் சம்பவம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் வரப்பிரசாத். அவருடைய மனைவி 13 ஆண்டுகளுக்கு முன் கணவனை பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் தன்னுடைய இரண்டு மகள்களையும் வரப்பிரசாத் வளர்த்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அவருடைய மூத்த மகள் ஒரு நபரை காதலித்து அவருடன் சென்று விட்டார். எனவே இளைய மகளை சிறப்பான முறையில் வளர்த்து படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்று வரபிரசாத் திட்டமிட்டு இருந்தார்.

இரண்டாவது சம்பவம்

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த வரப்பிரசாத்தின் இளைய மகள் லிகிதா ஸ்ரீ.. வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மகளின் காதலை அறிந்த தந்தை வரப்பிரசாத்.. காதலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

கழுத்தை நெறித்து கொலை

ஆனால் லிகிதா ஸ்ரீ தந்தையின் பேச்சை கேட்கவில்லை. மனைவி கைவிட்டு சென்றதால் ஏற்பட்ட கோபம், மூத்த மகள் வேறொரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்றதால் ஏற்பட்ட மனவேதனை ஆகியவற்றில் இருந்த வரப்பிரசாத் காதலில் விழுந்த இளையமகள் லிகிதா ஸ்ரீயை வீட்டில் அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

வீடியோ வெளியிட்ட பகீர் சம்பவம்

இந்த நிலையில் இளைய மகளை கொலை செய்தது பற்றி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற விசாகப்பட்டினம் போலீசார் லிகிதா ஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து வரப்பிரசாத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com