ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து வெளிவர உதவிய அனைவரையும் சந்திக்க விரும்புவதாக கூறிய நளினி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரும் நேற்று முன்தினம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் நளினியும் ஒருவர்.
நாட்டிலேயே அதிக காலம் சிறையில் இருந்த பெண்ணான நளினி ஸ்ரீஹரன், தனது கணவரை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விரைவில் விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தினார். திங்கட்கிழமை கணவரை திருச்சி சிறப்பு முகாமில் சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.
நளினிக்கும் முருகனுக்கும் திருமணமாகி வீட்டில் ஒரு குழந்தை இருப்பதாக கூறிய நளினி அவர்களது மகள் தந்தையை சந்திப்பதில் மிகவும் ஆவலாக இருக்கிறாள் என்று கூறினார்.
நளினி செல்ல விரும்பும் இடங்கள்:
தமிழ்நாட்டின் சில இடங்களுக்குச் செல்ல விரும்புவதாகவும் அதில் முக்கியமாக மறைந்த கமலா சர் நினைவிடம் இருப்பதையும் தெரிவித்தார் நளினி. அவருடைய கணவரை இனும் சந்திக்காததாக் அவர் மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறினார்.
இந்த வழக்கில் இருந்து வெளிவர உதவிய அனைவரையும் சந்திக்க விரும்புவதாக நளினி தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க விரும்புவதாகவும் விரைவில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அவருக்கு நன்றி தெரிவிக்கவுள்ளதாகவும் கூறினார் நளினி.
காந்தி குடும்பத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவராக இருப்பதாகவும் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் நளினி.
சிறையில் இருந்த நாட்களை நினைவு கூர்ந்த நளினி, குற்றவாளிகள் சிறையில் மரண தண்டனை கைதிகள் போல் நடத்தப்பட்டதாகவும், இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தும் சிறைக்குள் அடைக்கப்பட்டதாகவும் கூறினார்.
குடும்பம்தான் அவரது முன்னுரிமை என்றும், தொழில் ரீதியாக எதையும் செய்யப் போவதில்லை என்றும் நளினி கூறினார். மேலும் அவரது முழு வாழ்க்கையும் ஏற்கனவே முற்றிலும் அழிந்துவிட்டதால், குடும்பத்தை கவனித்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தியின் மகளும், காங்கிரஸ் தலைவருமான பிரியங்கா காந்தி வேலூர் மத்திய சிறைக்கு வந்து தன்னைச் சந்தித்த நேரத்தை நளினி நினைவு கூர்ந்தார் நளினி. தந்தையின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நளினியை பிரியங்கா காந்தி மார்ச்18, 2008 அன்று சந்தித்தார்.
அந்த சந்திப்பில் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பிரியங்கா கேள்வி எழுப்பியதாகவும் பிரியங்கா காந்தி தன்னை சிறையில் சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டு அழுததாகவும் நளினி கூறினார்.