ரூ. 60000 கோடியை எட்டப்போகும் இந்திய அமெரிக்க வர்த்தகம்...சாத்தியமா?!!

ரூ. 60000 கோடியை எட்டப்போகும் இந்திய அமெரிக்க வர்த்தகம்...சாத்தியமா?!!

இந்தியா அமெரிக்கா  இடையே சுமார் 17500 கோடி மதிப்பிலான இருதரப்பு வர்த்தகம் உள்ளது.  10 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரிக்கும்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தகம் 50000 முதல் 60000 கோடியை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  தற்போது, ​​இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 17500 கோடி மதிப்பிலான இருதரப்பு வர்த்தகம் உள்ளது எனவும் கூறினார்.  

14 உறுப்பினர்களைக் கொண்ட இந்தோ-பசிபிக் பொருளாதார செழுமை கட்டமைப்பின் வர்த்தகத்தில் இந்தியா ஒரு பகுதியாக இருக்குமா என்ற கேள்விக்கு அதனால் இந்தியாவிற்கு என்ன பலன் என்பதை பொறுத்தே அமையும்  என்றும் கோயல் தெரிவித்தார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றினாரா போக்குவரத்து துறை அமைச்சர்?!! எப்படி?!!