பப்ஜி விளையாட முடியாததால் தூக்கில் தொங்கிய மாணவன்...

டேட்டா தீர்ந்து போனதால் பப்ஜி, ஃப்ரீ ஃபயர் கேம் விளையாட முடியாத சோகத்தில் 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துள்ளார்.
பப்ஜி விளையாட முடியாததால் தூக்கில் தொங்கிய மாணவன்...
Published on
Updated on
1 min read

இந்தியா முழுவதும் பப்ஜி கேமுக்கு தடைகள் விதித்தபோதும், இளைஞர்கள், சிறுவர்கள் சில டெக்னிக்குகளை பயன்படுத்தி மீண்டும் அதனை விளையாடி வருகின்றனர். 

ஒரே நேரத்தில் ஏராளமான பயனர்கள் இந்த கேமில் இணைந்து கொண்டு துப்பாக்கி, அணுகுண்டு ஆகியவற்றை உபயோகிப்பது போலவும், கொல்லுடா, போட்டுத் தள்ளுடா.. என பேசிக் கொள்வதும் என சிறுவர்கள் முதற்கொண்டு இப்படியான ஆக்ரோஷமான மனநிலையில் உள்ளனர். 

வன்முறையைத் தூண்டும் இந்த பப்ஜிக்கு இந்திய அரசு தடை விதித்தபோதும் ஃப்ரீ ஃபயர் விட்டுக் கொண்டு மீண்டும் செல்போன் மூலம் துப்பாக்கியை தூக்கியிருக்கின்றனர் இளைஞர்கள். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணியைச் சேர்ந்த சுசிகரன் என்பவரது மகன் குகன். 

13 வயது சிறுவனான இவன் அந்த பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். படிப்பு போக மீத நேரங்களில் செல்போனை தூக்கி பப்ஜி மற்றும் ஃப்ரீ ஃபயர் கேம்களில் மும்முரமாக இருந்து வந்துள்ளான். 

பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் பலமுறை கண்டித்தும் கேட்காத குகன் தொடர்ந்து செல்போனிலேயே விளையாடியுள்ளான். இந்நிலையில் 26-ம் தேதியன்று வழக்கம் போல விளையாடுவதற்கு தயாராகியுள்ளான் குகன். ஆனால் செல்போனில் டேட்டா இல்லாத காரணத்தால் பப்ஜி விளையாட முடியாமல் தவித்துள்ளான். 

இதனால் வேதனையில் இருந்த குகன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் குகனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com