மனைவியுடன் நெருக்கமாக இருந்ததை, வீடியோ எடுத்து மிரட்டிய கணவன்...

கன்னியாகுமரி அருகே மனைவியுடன் நெருக்கமாக இருந்ததை, வீடியோ எடுத்து மிரட்டிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனைவியுடன் நெருக்கமாக இருந்ததை, வீடியோ எடுத்து மிரட்டிய கணவன்...

கன்னியாகுமரி | முட்டம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். 

அதில், தனக்கும் தோவாளை பகுதியைச் சேர்ந்த சதீஷ் பெருமாள் (வயது 34) என்பவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வரும் சதீஷ் பெருமாள், தற்போது குடும்ப பிரச்சினை காரணமாக புகார்தாரருடன் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்...

இதனைத் தொடர்ந்து சதீஷ், தனது மனைவி, அதாவது புகார்தாரௌடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் எடுத்து வைத்து, இணையத்தில் வெளியிடுவதாக தன்னை மிரட்டி வருவதாக புகாரளித்துள்ளார். தன்னைக் காக்க, சதீஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார்தாரர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சைபர் கிரைம் போலீசுக்கு அறிவுறுத்தியதில், சதீஷ் பெருமாள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியின் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியதாக மருந்து விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | தாயுடன் சேர்ந்து தந்தையை அடித்து கொன்ற மகன்...