ஊராட்சி மன்றத் தலைவரை வெட்டிக் கொன்ற மர்மகும்பல்...

காஞ்சிபுரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் மர்மகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவரை கொலை செய்த காரணம் என்ன? காணலாம்..

ஊராட்சி மன்றத் தலைவரை வெட்டிக் கொன்ற மர்மகும்பல்...

காஞ்சிபுரம் : குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டு வந்தவர் வெங்கடேசன். புரட்சி பாரதம் கட்சியின் முக்கிய பதவியை வகித்து வந்த இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வந்த வெங்கடேசனுக்கு,  2 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் தனது நண்பர் சத்யா என்பவருடன் வெங்கடேசன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

மேலும் படிக்க | மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணால் பரபரப்பு...

அப்போது ஆதனூர் ராகவேந்திரா பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் மறைந்திருந்த சுமார் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென பெட்ரோல் வெடிகுண்டை வெங்கடேசன் மீது தூக்கி எறிந்தது. இதனால் நிலைதடுமாறிய வெங்கடேசன் விழுந்ததையடுத்து அவருடன் வந்த சத்யா சம்பவ இடத்தை விட்டு தப்பியோடினார். 

இதைத் தொடர்ந்து வெடிகுண்டை வீசீய அந்த மர்மகும்பல் வெங்கடேசனை சுற்றி வளைத்து கையில் வைத்திருந்த வீச்சரிவாளைக் கொண்டு சரமாரியாக வெட்டி வீசியது. தலை, கழுத்து, உடல் பாகங்களில் வெட்டு விழுந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் வெங்கடேசன். 

மேலும் படிக்க | "லீவு தர்லைன்னா கொலையா என்ன கொடும சார் இது"!!! பட்ட பகலில் வாலிபர் வெட்டிக் கொலை, போலீசார் விசாரணை...

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த மணிமங்கலம் போலீசார் வெங்கடேசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மணிமங்கலத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தின் கொலையாளிகளுக்கும் வெங்கடேசனுக்கும் தொடர்பிருந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் மீதும், கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதற்கு பழிக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பிரிந்து போன மனைவி... மச்சானுக்கு அரிவாள் வெட்டு..