சென்னை | காசி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா இணைந்து நடித்துள்ள "கண்ணை நம்பாதே" திரைப்படம் இன்று வெளியாவதை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகும் முதல் படம் “கண்ணிஅ நம்பாதே” தான். திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ், மாரிமுத்து, பூமிகா, ஆத்மிகா, சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
2018 இல் அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் இயக்குனர் மு.மாறன் இந்த 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் படிக்க | ‘இந்திய சினிமா வென்றது’ - ஆஸ்கர் குறித்து நடிகர் ராம்சரண்...
காசி திரையரங்கில் திமுக தென் சென்னை மாவட்ட தலைவர் கோட்டூர்.S. பிரகாஷ் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாநில செயலாளர் பாபு பொதுமக்களுக்கு தையல் இயந்திரங்கள், இஸ்திரி பெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் , ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி உடைக்கான துணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து கண்ணை நம்பாதே திரைப்படத்தை பார்க்க நடிகர் கூல் சுரேஷ் செங்கலுடன் வந்தார். அப்போது, படத்தை இயக்கிய இயக்குநர் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஆஸ்காரை அலங்கரித்தது ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’...!
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கல் மன்னன் திரைப்படத்தை பார்க்க வந்துள்ளேன் என்றார். மேலும், என்னால் இந்த செங்கலை இரண்டு நிமிடம் கூட பிடிக்க முடியவில்லை, 6 மாதங்கள் இதை வைத்துக் கொண்டு எப்படி பிரச்சாரம் செய்தார் என்று தெரியவில்லை, அவர் கையும், மனமும் வலிமை மிக்கது என தெரிவித்தார்.
நலத்திட்ட உதவி பெற்ற மாற்றுத்திறனாளி ஶ்ரீதர் மூன்று சக்கர வாகனம் எனக்கு கொடுத்த உதவியாக உள்ளது என்று நன்றி தெரிவித்தார். இவர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.