ஆஸ்காரை அலங்கரித்தது ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’...!

ஆஸ்காரை அலங்கரித்தது ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’...!
Published on
Updated on
1 min read

சிறந்த பாடலுக்கான பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுநாட்டு பாடலும், சிறந்த ஆவண குறும்படத்திற்கான பிரிவில் முதுமலை யானை பராமரிப்புத் தம்பதியினரின் கதையான தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படமும் ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ளன.


95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கியது. இவ்விருதிற்காக இந்தியாவில் இருந்து 3 படைப்புகள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் கீரவாணி இசையமைத்த நாட்டு நாட்டு, சிறந்த பாடலுக்கான பிரிவிலும், முதுமலை யானை பராமரிப்புத் தம்பதியினரின் கதையான  தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ், சிறந்த ஆவண குறும்படத்திற்கான பிரிவிலும், ஷானெக் சென் இயக்கிய All that breaths, சிறந்த ஆவணப்பட feature-க்காக பிரிவிலும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை, இந்தியாவின் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படம் வென்றுள்ளது.

தமிழ்நாட்டின் முதுமலைப் பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை, இதன் மூலம் இன்று உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. காட்டுநாயக்கர் பழங்குடிகளான இருவரின் வாழ்வியலையும், யானைகளோடு அவர்கள் கொண்டிருக்கும் ஆழமான உறவையும் இப்படத்தில் உணர்வுப்பூர்வமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து அடுத்தபடியாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை, நாட்டு நாட்டு பாடல் தட்டிச் சென்றுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் மின்னல்வேக நடனமாடிய இப்பாடலுக்காக பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணியும் விருதை உற்சாகத்துடன் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் சிறந்த ஆவணப்பட feature-க்காக பரிந்துரை செய்யப்பட்ட, ஷானெக் சென் இயக்கிய All that breaths படத்திற்கு விருது கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com