மாற்றத்துக்கான விதையை ஆழமாக விதைக்கும் முயற்சி தான் ‘அயலி’...

அயலி என்ற இணையத்தொடரைக் குறித்து, அத்தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெருமைபேசியது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
மாற்றத்துக்கான விதையை ஆழமாக விதைக்கும் முயற்சி தான் ‘அயலி’...
Published on
Updated on
1 min read

வருகிற ஜனவரி 26ம் தேதி, ZEE5 செயல்யில் ‘அயலி’ என்ற இணையத்தொடர் வெளியாகிறது. எஸ். குஷ்மாவதி எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் தயாரிப்பில், முத்துக்குமார் இயக்கத்தில் அபி நட்சத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த இணையத்தொடருக்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரியேட்டிவ் தயாரிப்பாளரான குஷ்மாவதி கூறுகையில்,

பொழுதுபோக்கு துறையில் பெண்களை மையமாகக் கதைகள் ஏராளமாக இருந்தாலும், இந்த கதைகளை நேர்மையாகவும் பயன்தரத்தக்கதாகவும் முன்னிலைப்படுத்த நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

பெண்களை மையமாகக் கொண்ட கதைகளை கண்டறிந்து அதை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஒரு முழுமையான நீதியை அளிப்பதே ஒரு தயாரிப்பாளராக எனது நோக்கம். - அயலி ஐ தயாரிப்பதிலும் எனது முயற்சி அதை நோக்கியே இருந்தது.

என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஜனவரி 26 வெளிவர இருக்கிறாள் ‘அயலி’...
 
இயக்குநர் முத்துக்குமார் பேசுகையில் கூறினார்,

இன்று ஸ்ட்ரீமிங் தளங்கள் பொதுமக்களின்  கண்ணோட்டத்தை வெற்றிகரமாக மாற்றியமைக்கக் கூடிய கதைகளை முன்வைக்கின்றன, மேலும்  ஒரு பிரச்சாரமாக தோன்றாத வகையில் அந்த மாற்றத்துக்கான விதையை ஆழமாக விதைக்கும் எங்கள் உண்மையான முயற்சிதான் அயலி.

இந்தத் தொடரானது, பெண்களின் கல்வி மற்றும் அதிகாரம் மற்றும் அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை  அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வயதுக்கு வந்த பெண்களின் ஒரு கதையாகும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றான  இந்தக் கதையை காட்சிப்படுத்த எங்களுக்கு ஒரு தளத்தை வழங்கிய ZEE5 க்கு நாங்கள் நன்றிபாராட்டுகிறோம்.

என்று தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com