பல பெண்களுக்கு இது தூண்டுகோலாக இருக்கும் - ‘அயலி’ குறித்து மணீஷ் கல்ரா...

ZEE 5 ஆபில் வெளியாக இருக்கும் அயலி தொடரைக் குறித்து மணீஷ் கல்ரா பெருமை பேசியுள்ளார்.

பல பெண்களுக்கு இது தூண்டுகோலாக இருக்கும் - ‘அயலி’ குறித்து மணீஷ் கல்ரா...

2023ம் ஆண்டின் முதல் தமிழ் தொடரான அயலி என்ற இணையத் தொடருக்கான எதிர்பார்ப்பு, அதன் ட்ரெயிலர் மூலமாகவே அதிகரித்துள்ளது.

தான் வயதிற்கு வந்ததை கூறினால் தனது கனவுகள் மண்ணோடு போய் விடுமோ என்ற பதற்றத்தில், தாய் மகள் செய்யும் சேட்டைகளும், அதில் தீப்பற்றி எரியும் கிராமமும் தான் அயலி கூறும் கதை.

8 எபிசோடுகளாக வெளியாக இருக்கும் இந்த தொடரை, எஸ். குஷ்மாவதி எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் தயாரிப்பில், முத்துக்குமார் இயக்கத்தில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் நடிப்பில் ZEE5 தளத்தில் வரும் ஜனவரி 26ம் தேதியன்று வெளியாக இருக்கிறது.

மேலும் படிக்க | ஜனவரி 26 வெளிவர இருக்கிறாள் ‘அயலி’...

இந்த இணையத் தொடர் குறித்து, ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா, கூறினார்

“கடந்த ஆண்டு விலங்கு, ஃபிங்கர் டிப் மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற எங்களின் தமிழ் அசல் திரைப்படங்களுக்குக் கிடைத்த வியக்கத்தக்க மாபெரும் வெற்றிகரமான வரவேற்பிற்குப் பிறகு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வழக்கத்திற்கு மாறான கதைக்களத்தைக் கொண்ட மற்றொரு தொடரான அயலியை நாங்கள் வெளியிட உள்ளோம்.

பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய சமூக செய்தியுடன் கூடிய உருவாக்கங்கள் கல்வி, அறிவு, மற்றும் தகவல்களை வழங்கி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டது என்று ZEE5 இல் உள்ள நாங்கள் நம்புகிறோம்.

அதைத்தான் அயலியும் செய்ய இருக்கிறது பழங்கால பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவைத் துரத்தும் ஓடும் ஒரு இளம் பெண்ணின் இந்தக்கதையானது கனவுகளைச் சுமந்து கொண்டு செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கும் பல பெண்களின் நம்பிக்கைக்கு தூண்டுகோலாக அமைந்து அவர்களையும் அதை நோக்கிச் செலுத்தும் என்பது உறுதி”

யாரும் அதிகமாக கை வைக்கத் தயங்கும் ஒரு சில பழைய பழக்கவழக்கங்களை மிக தெளிவாக சிறிது காமெடியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையத் தொடர் வெற்றி பெற பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | டிராமா இல்லாத கல்யாணம் எது? ஹன்சிகாவின் திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது...