கோவில்பட்டி அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா...

பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் ஏரளமான மக்கள் கலந்து கொண்டு 5 முதல் 7 கிலோ வரை மீன்பிடித்தனர்.
கோவில்பட்டி அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா...
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி | கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில் அக்கிராம மக்கள் சார்பில் மீன் குஞ்சகள் வாங்கி விடப்பட்டன. தற்பொழுது மீன்கள் நன்கு வளர்ந்து இருந்த நிலையில் மீன்பிடித்திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதையெடுத்து இன்று தொடங்கிய மீன்பிடித்திருவிழாவில் அக்கிராமத்தினை சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன் பிடிக்க தொடங்கினார். மீன்வலை, குடை, பிளாஸ்டிக் டிரம் என கிடைத்த பொருள்களை கொண்டு மீன் பிடித்தனர்.

சிறுவர்கள், சிறுமிகள், பெரியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு மீன் பிடித்தனர். விரல், கட்லாக் உள்ளிட்ட பலவகை மீன்களை பிடித்து சென்றனர். ஒவ்வொருவரும் 5 முதல் 7கிலோ வரை மீன்களை பிடித்து சென்றனர்.

பிடிக்க முடியாதவர்களுக்கு பொது மக்கள் மீன்களை பகிர்ந்து அளித்தனர். கிராம மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக, அனைவரிடம் நல்லுணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக மீன்பிடித்திருவிழா நடத்தியதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com