புதுக்கோட்டை மீனவர்கள் உட்பட 20 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...!

புதுக்கோட்டை மீனவர்கள் உட்பட 20 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் உட்பட 20 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 2 படகுகளில் இருந்த 16 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. 

இதையும் படிக்க : சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2-ல்... 2 நிமிட இடைவேளையில் ஒரு ரயில் இயக்கம்...மெட்ரோ நிர்வாகம் முடிவு!

இதேபோல, புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆரோக்கியராஜ் என்பவரது படகில் அவர் உட்பட அசோக் கருப்பு, சக்தி ஆகிய 4 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அனலைதீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 பேரையும் கைது செய்து பருத்தித் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றது.