செல்ஃபோன் டவர் மேலேறி தற்கொலை முயற்சி செய்த நபரால் பதற்றம்...

கோட்டூரில் ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் செல்ஃபோன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்த நபரால் பரபரப்பு நிலவியுள்ளது.
செல்ஃபோன் டவர் மேலேறி தற்கொலை முயற்சி செய்த நபரால் பதற்றம்...
Published on
Updated on
1 min read

தேனி : கோட்டூரில் புதிய தமிழகம் கட்சியின் முன்னால் மாவட்ட துணைச்செயலாளர் கருப்புத்துரை, கோட்டூரில் செல் போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி. கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கருப்புத்துரை மனைவியை தாக்கியுள்ளார்.

வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறும் நிலையில், இந்த தற்கொலை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கருப்புத்துரை  தகப்பனார் பயன்பாட்டில் உள்ள  இடத்தை ஊராட்சி மன்ற தலைவர் அகற்றியதால் இன்று செல்போன் டவர் ஏரி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து, கருப்புதுரை புகார் தெரிவித்த நிலையில் தற்போது உரிய நடவடிக்கை எடுக்காததால் கருப்பு துறை செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து வருகிறார். இதனால் தற்போது கோட்டூர் பகுதி பரபரப்பான காணப்படுகிறது.

காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும்  தற்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com