உலகம்

”இந்தியாவிற்கும் இடமளிக்கலாமே...” ஆதரவளிக்கும் ரஷ்யா...எங்கே??

Malaimurasu Seithigal TV

பொருளாதார வளர்ச்சியில் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  விரைவில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்.  பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்தியாவுக்கு பரந்த அனுபவம் உள்ளது.

ஆதரவளித்த ரஷ்யா:

ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க ரஷ்யா மீண்டும் ஆதரவு அளித்துள்ளது.  ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியா மற்றும் பிரேசில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக மாற ஜப்பான் மற்றும் ஜெர்மனி அதிக அளவிலான முயற்சியை செய்து வருகின்றன.  

இது உலகின் பன்முகத்தன்மைக்கு நல்ல அறிகுறியாகும். உலகளாவிய மற்றும் நாட்டின் பிரச்சினைகளில் இந்தியா மற்றும் பிரேசிலின் நிலைப்பாட்டை அறிந்து கொண்டு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் என்ன கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதை ஆராய வேண்டும் என செர்ஜி தெரிவித்துள்ளார்.

முன்னணியில் இந்தியா:

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி கூறியுள்ளார்.  விரைவில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் எனவும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பரந்த அனுபவத்தை இந்தியா கொண்டுள்ளது எனவும் செர்ஜி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக:

இந்த ஆண்டு செப்டம்பரில், 77வது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளை UNSC இல் சேர்த்தால், அது மிகவும் ஜனநாயகமானது என்று கூறியிருந்தார்.

மேலும் உலக அளவில் இந்தியாவும் பிரேசிலும் முக்கிய பங்காற்றுவதாகவும், ஐ.நா அவையின் நிரந்தர உறுப்பினர்களாக அவற்றை கவுன்சிலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

-நப்பசலையார்