காங்கிரஸ் அவசர கூட்டம்...கர்நாடகா தேர்தல் வியூகமா...

காங்கிரஸ் அவசர கூட்டம்...கர்நாடகா தேர்தல் வியூகமா...

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.  காங்கிரஸ் ஏற்கனவே மிக சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.  இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கர்நாடக மூத்த தலைவர்களை கட்சி தலைமை அலுவலகத்தில் ஒன்றிணைய அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடகா தேர்தல்:

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, வரவிருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து காங்கிரஸ் மிக அதிக அளவில் தீவிரம் காட்டி வருகிறது.  கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று அக்கட்சியின் தலைமையகத்தில் கர்நாடக மூத்த தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  

இதையும் படிக்க:  கர்நாடகாவில வெற்றி வேணுமா? வேண்டாமா? என்ன சொல்ல வர்றார் காங்கிரஸ் தலைவர்!!!

கூட்டத்தின் போது, ​​தேர்தல் தொடர்பான கட்சியின் வியூகம் குறித்து கார்கே ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.  அந்த சந்திப்பிற்கு பிறகு கட்சித் தலைவர்களையும் தொண்டர்களையும் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில்..:

புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கர்நாடகாவின் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட 14 மூத்த தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் மோதல்:

கர்நாடக காங்கிரசுக்குள் கோஷ்டி பூசல் என்ற யூகங்களுக்கு மத்தியில், மாநிலத்தில் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய ஒற்றுமையாக செயல்பட தலைவர்களுக்கு கார்கே அறிவுறுத்தலாம் எனவும் இது தவிர, தேர்தல் ஏற்பாடுகள், பொதுக்கூட்டங்களை திட்டமிடல், வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஏற்றி விட்ட ஏணியை....குஜராத்தில் காங்கிரஸின் அவமானகரமான தோல்வி ஏன்? மௌனம் கலைத்த காங்கிரஸ்!!!