கர்நாடகாவில வெற்றி வேணுமா? வேண்டாமா? என்ன சொல்ல வர்றார் காங்கிரஸ் தலைவர்!!!

கர்நாடகாவில வெற்றி வேணுமா? வேண்டாமா? என்ன சொல்ல வர்றார் காங்கிரஸ் தலைவர்!!!

கர்நாடகாவில் வெற்றி பெற பாஜக ஏற்கனவே மும்முரமாக செயல்பட்டு வருவகிறது.  நமது தலைவர்கள் அனைவரும் கிராமங்களுக்குச் சென்று, மாநிலம் முழுவதும் பயணம் செய்து, பாஜக, பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் அவர்களது அமைச்சர்கள் போல விரைவாக செயல்பட்டு மக்களை கட்சியின் பக்கம் ஈர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

சட்டசபை தேர்தல்: 

நாட்டின் இரு மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில், கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ளன.  இதையொட்டி, கர்நாடகாவில் அரசியல் கட்சிகள் முகாமிடத் தொடங்கியுள்ளன.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை தனது சொந்த மாவட்டமான கர்நாடகாவின் கலபுர்கியில் நடந்த பேரணியில் உரையாற்றிய போது அங்கு காங்கிரஸ் தொண்டர்களை ஒன்றிணையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தேவை ஒற்றுமை:

கர்நாடகாவில் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைவர்களை வலியுறுத்திய அவர், மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் யார் என்பதை கட்சி முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

உறுதியான வெற்றி:

இந்த மாநிலத்தில் நீங்கள் காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் எனவும் நான் இன்று காங்கிரஸ் தலைவராக இருக்கிறேன் எனவும் எனக்கும் நமது கட்சிக்கும் மரியாதை அளிக்கும் வகையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும் என்று கார்கே கோரிக்கை வைத்துள்ளார். மக்களுக்காக உழைத்து பல்வேறு பொதுப்பணிகளை செயல்படுத்த வேண்டும் என விரும்புவதாகவும் நீங்கள் எங்களுக்கு பலம் தருவீர்கள் என்று நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.

யார் முதலமைச்சர்:

மறுபுறம், முதல்வர் பதவிக்கான போராட்டம் குறித்து, கார்கே கூறுகையில், யார் முதலமைச்சர் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் எனவும் நமக்குள் சண்டை போட்டுக் கொண்டால் கிடைக்கக்கூடியதும் பறிபோய்விடும் எனவும் கூறியுள்ளார்.  அதனால் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸின் வெற்றியை சுட்டிக்காட்டிய அவர், அங்குள்ள வெற்றியை கர்நாடகாவிலும் பிரதிபலிக்க அனைவரும் கைகோர்த்து முன்னேற வேண்டும், எனவும் தெரிவித்துள்ளார்.  

வேணும் ஆனா வேண்டாம்:

தொடர்ந்து பேசிய கார்கே நீங்கள் என்னையோ காங்கிரஸையோ தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறவில்லை எனவும் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி மக்கள் நலனுக்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.  

இவ்வாறு இவர் கூறுவதன் மூலம் என்ன கூற விழைகிறார் என்பது புரியவில்லை எனவும் ஹிமாச்சல பிரதேச தேர்தல் இவர்களுக்குள் ஒரு புது தைரியமான நம்பிக்கையை கொடுத்துள்ளது எனவும் அரசியல் விமர்சகரகள் கூறியுள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   விழுந்து மீண்டெழுந்த காங்கிரஸ்...ஹிமாச்சலில் கடந்து வந்த பாதை...