கடற்படையின் அனைத்து பிரிவுகளிலும் முதன்முறையாக பெண்களை கமாண்டோக்களாகப் பணியாற்ற அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
முதல் முறையாக..:
இந்திய கடற்படை அதனுடைய உயரடுக்கு சிறப்புப் படைகளில் பெண்களை இணைத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முதன்முறையாக கப்பற்படையின் அனைத்துப் பிரிவுகளிலும் கமாண்டோவாகப் பணியாற்ற பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். எனினும், இதனைக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
சமமான வாய்ப்பு:
கடற்படை அதன் அனைத்து பிரிவுகளிலும் பெண்களுக்கும் கதவுகளைத் திறந்துள்ளது. கடற்படை தற்போது அதனை நடுநிலையாக மாற்றி பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
பயிற்சியில்..:
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் சிறப்புப் படைகளில் சில பெண்கள் சிறப்பு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது கடுமையான பயிற்சி பெற்று வருகின்றனர்.
மறைமுகமாகவே...:
பயிற்சிக்குப் பிறகு, பெண்கள் கடற்படையில் மரைன் கமாண்டோஸாக மாற்றப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் இராணுவ வரலாற்றில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். ஆனால் அவர்கள் நேரடியாக சிறப்புப் படையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் தன்னார்வ வீரர்களாக பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கோஸ் யார்?:
கடற்படையில் உள்ள மார்கோஸ் பல்வேறு பணிகளுக்கு பயிற்சி பெற்றவர்கள் மற்றும் கடல், வான் மற்றும் தரையின் பணிகளையும் மேற்கொள்ள முடியும். இந்த கமாண்டோக்கள் எதிரியின் போர்க்கப்பல்கள், ராணுவ தளங்கள், உளவுப் பணிகள் ஆகியவற்றுக்கு எதிராக ரகசிய தாக்குதல்களை நடத்த முடியும். மார்கோஸ் கமாண்டோக்கள் கடல் எல்லையில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட முடியும்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: காங்கிரஸ் அவசர கூட்டம்...கர்நாடகா தேர்தல் வியூகமா...