தமிழ்நாடு

மகாமகத்தை முன்னிட்டு, மெரினாவில் குவிந்த மக்கள்...

தமிழ்நாட்டில் மாசி மகத்தை ஒட்டி, சென்னை மற்றும் புறநகரில் பல கோயில்களில் சுவாமிக்கு தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடத்தப்பட்டது.

Malaimurasu Seithigal TV

ஆண்டு  தோறும் மாசி மாதத்தில் மாசி மகத்ததை ஒட்டி கோவில்களில் இருக்கும் உற்சவ சிலைகளை நீர் நிலைகளுக்கு கொண்டு சென்று நீராடி எடுத்து வருவது வழக்கம். மேலும்  இந்த திருவிழா கடலாடு திருவிழா அல்லது தீர்த்தவாரி திருவிழா என்றும் அழைக்கபடுகிறது. 

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி சடங்கில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட கோவில் உற்சவ சிலைகள் வாகனங்கள் மற்றும் சப்பரங்கள் மூலம் எடுத்து வரப்பட்டு கடற்கரையில் வைத்து பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு வழிப்பட்டனா். 

புதுக்கோட்டை | அறந்தாங்கி  அருகே குளமங்களம் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவிலில் அமைந்துள்ளது.  இக்கோவிலில் மாசிமக திருவிழாவவை ஒட்டி நடந்த விழாவில் அய்யனார் சுவாமிக்கு மேல தாளம் முழங்க சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து  33 அடி உயரமுள்ள சிலைக்கு 70   அடி காகித மாலையை  சாற்றி பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் | உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசிமாதம் பிரம் மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதனை தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில், லட்சுமி, சரஸ்வதியுடன் காமாட்சி அம்பாள் உற்சவம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னா் பக்தர்கள் கோவில் குளத்தில் குளித்து புனித நீராடி சென்றனர்.

புதுச்சேரி | திருக்காஞ்சியில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாசி மக திருவிழாவில் கெங்கைவராக நதீஸ்வரர், மீனாட்சி காமாட்சி உடன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.