பொழுதுபோக்கு

“நான் வெறும் நடிகன் தான்” - நடிகர் விஜய் சேதுபதி...

தற்போது வெளியாகியுள்ள இணைய தொடரில் நடித்த நடிகர் விஜய்சேதுபதி தான் ஒரு பான் இந்திய நடிகர் இல்லை எனவும் தான் வெறும் ஒரு நடிகர் தான் எனவும் தெரிவித்தார்.

Malaimurasu Seithigal TV

எப்பொழுதும் பல வித்தியாசமான படைப்புகள் மூலம் தன்னை மக்கள் செல்வனாக உருவாக்கிக் கொண்ட வெர்ச்டைல் நடிகர் தான் விஜய்சேதுபதி. தமிழன் என பெருமையாக பேசிக் கொள்ளும் நடிகர் விஜய் சேதுபதியின் கலை திறமை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விகர்ம்’ படத்திலேயே தெரிந்துவிட்டது. அவரது திறமையை இந்திய அளவில் கொண்டு சென்றதன் காரணம், அப்படம் ஒரு பான் இந்திய படமாக வெளியானது தான்.

இதனைத் தொடர்ந்து பல இந்தி படங்கள் மற்றும் இணைய தொடர்களில் விஜய் சேதுபதிக்கு நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. தனது முதல் இந்தி அறிமுகத்தை “ஃபர்சி” என்ற இணையத் தொடர் மூலம் செய்திருக்கிறார். காவல் அதிகாரியாக பட்டையைக் கிளப்பி இருக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த இணையத் தொடர் மூலம் பல தரப்பட்ட ரசிகர்கள் உருவாகியது குறிப்பிடத்தக்கது.

வருகிற பிப்ரவரி 10ம் தேதி, அமேசான் ப்ரைம் இணையத்தளத்தில் வெளியாக இருக்கும் இந்த தொடரை, டி.கே மற்றும் ராஜ் உருவாக்கி உள்ளனர். ஷாஹித் கப்பூர், ராஷி கண்ணா போன்ற பல பெரும் நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த் அதொடர் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், குழுவினருடன் இணைந்து பேசும் போது, விஜய் சேதுபதியை “பான் இந்திய” கலைஞர் என விவரித்தனர்.

அப்போது அதனை அப்படியே நிறுத்தி “ஐய்யோ, நான் பான் இந்திய கலைஞர் எல்லாம் இல்லை. நான் ஒரு நடிகர் அவ்வளவு தான். என்னை பான் இந்திய நடிகர் என்றெல்லாம் விவரிக்காதீர்கள்” என கூறினார். மேலும், தன்னை அப்ப்டி அழைப்பது தனக்கு சங்கடமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்த ராஷி கண்ணா இது குறித்து பேசும்போது, “எனக்கு பான் இந்தியா என்ற வார்த்தையே விசித்திரமாக இருக்கிறது. எனக்கு மொழி மற்றும் தான் மாற்றமாக தெரிகிறதே தவிறு, நாங்கள் வெறும் நடிகர்கள் தான்” எனக் கூறி முடித்தார்.

எப்பொழுதும் சர்ச்சைகளைத் தேடி அலையும் பாலிவுட் பத்திரிக்கையாளர்களுக்கு தீணி போடும் வகையில் தென்னிந்திய நடிகர்களாக பிரசித்தியாகியுள்ள நடிகர்கள் விஜய் சேதுபதி மற்ரும் ராஷி கண்ணா கூறிய இந்த கருத்துகள் தற்போது பெரிதாக பரவி மக்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.