மறைந்த திரைப்பட பாடகி வாணி ஜெயராம் உடல் அரசு மரியாதையுடன் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பிரபல திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் மாடிப் படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க : 19 சதவீதத்திலிருந்து 22 சதவீதம் உயர்த்த விவசாயிகள் கோரிக்கை...!
இதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாணி ஜெயராம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாணி ஜெயராம் மறைவால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் உயிரிழந்த வாணி ஜெயராமுக்கு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, பிற்பகல் ஒரு மணி அளவில் காவல்துறை மரியாதையுடன் நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்து மறைந்த பாடகி வாணி ஜெயராமின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 30 குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின்னர் வாணி ஜெயராம் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.