மாவட்டம்

காலாவதியான குளிர்பானங்களை வீசிச்சென்ற மர்ம நபர்கள்...

காலாவதி குளிர்பானங்களை சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மூட்டை மூட்டையாக வீசி சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு நிலவியுள்ளது.

Malaimurasu Seithigal TV

திருவள்ளூர் | சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருப்பதி பேருந்து நிறுத்தம் மற்றும் காமராஜர் சிலை அருகே புறநகர் பேருந்து நிறுத்தம்  சாலை ஓரத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காலாவதியான குடிநீர் மற்றும் குளிர்பானங்களை மூட்டை மூட்டையாக வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இப்பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த சிறுவர்கள், பொதுமக்கள் மற்றும் மதுபான பிரியர்கள் காலாவதியானது என அறியாமல் சிறுவர்கள் மற்றும் மதுபான பிரியர்கள் அதை எடுத்து சென்றனர்.

இதை குடித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அந்த வழியாக சென்ற மக்கள் திருவள்ளூர் நகர போலீஸ் மற்றும் நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் நகர  போலீசார் மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடம் சென்று சாலையோரத்தில் இருந்த குளிர்பானங்களை நகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

திருவள்ளூர் நகரத்தில் குளிர்பானம் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் காலாவதியானவற்றை உடனே கொட்டி அழித்திட வேண்டும். இதுபோல் சாலையில் வீசிவிட்டு செல்லக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி எச்சரிக்கை விடுத்தார்.