கோவை: மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் - ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட கடிதம்!

கோவை: மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் - ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட கடிதம்!

கோவையில் பொது இடங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  

கோயம்புத்தூர் பேரூர் பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அருகேயுள்ள சாலையில், மருத்துவ கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்பட்டிருந்தன. அதில் காலாவதியான மற்றும் காலாவதியாகாத மாத்திரைகள், சொட்டு மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் குவியலாக இருந்தது.

இதையும் படிக்க : ஐடி ரெய்டு; சிக்கும் பெருந்தலைகள் யார், யார்?

எனவே, இதுகுறித்து குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்த இடத்திலிருந்து நிறுவனத்தின் பெயர் பதிவு செய்யப்பட்ட ரசீதுகளை கோவை பேரூராட்சியிடம் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து மருத்துவக்கழிவுகளை அகற்றிய பேரூராட்சி நிர்வாகம், கழிவுகளை கொட்டிய வாகன ஓட்டுனருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. மேலும்,  துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் மற்றும்   மாவட்ட கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.