க்ரைம்

தாயுடன் சேர்ந்து தந்தையை அடித்து கொன்ற மகன்...

பெரம்பலூரில் குடும்ப தகராறில் தாயுடன் சேர்ந்து மகன், தந்தையை அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Malaimurasu Seithigal TV

பெரம்பலூர் | பாரதிதாசன் நகர் முதல் தெருவில் வசித்து வருபவர்கள் ராமகிருஷ்ணன் - மலர் கொடி தம்பதியினர் ராமகிருஷ்ணன் ஆறு வருடங்களாக தியேட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 24 வயதில் வெங்கடேசன் என்ற மகன் உள்ளார் . ராமகிருஷ்ணனுக்கு இரு மாதங்களுக்கு முன்பு வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் ஆனதாக கூறப்படுகிறது.

மேலும் திருமணம் ஆனதிலிருந்து குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறபடுகிறது. இதேபோல் நேற்று காலை 11 மணியளவில் மலர்கொடியும் வெங்கடேசனும் ராமகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஒரு கட்டத்தில் வெங்கடேசன் வீட்டின் ஓட்டை உடைத்து சண்டையில் ஈடுபட்டதுடன் ராமகிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

காயமடைந்த ராமகிருஷ்ணன் வீட்டின் பின்புறம் தள்ளாடி கீழே விழுந்து கிடந்துள்ளார். இன்று அதிகாலை வீட்டின் அருகில் வசிக்கும் ராமகிருஷ்ணனின் தாயார் நீலம்மாள் வந்து பார்த்தபோது ராமகிருஷ்ணன் நீண்ட நேரம் ஆகியும் எழுந்தி இருக்காமல் இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் கூச்சல் இட்டு அழைத்துள்ளார்.

அவர்கள் வந்து பார்த்தபோது மூக்கில் ரத்தம் வந்த நிலையிலும் தலையில் பின்புறம் அடிபட்ட நிலையிலும் காலில் ரத்த காயங்களுடன் ராமகிருஷ்ணன் இறந்த கடந்துள்ளார் .பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராமகிருஷ்ணனின் மகனும் மனைவியும் சேர்ந்து அடித்துக் கொன்று விட்டு தப்பித்து சென்றது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி கொலை சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இறந்த ராமகிருஷ்ணனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு ராமகிருஷ்ணனை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள மலர்க்கொடி மற்றும் அவரது மகன் வெங்கடேசன் தேடி வருகின்றனர் .

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைப்பதற்காக மாவட்ட கண்காணிப்பாளர் பல முயற்சிகள் எடுத்து வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் காவல்துறை மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் வேதனை அளிக்கிறது.