பெற்ற குழந்தைகளைக் கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியர்...

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பதியுள்ளது.

பெற்ற குழந்தைகளைக் கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியர்...

ஹைதராபாத் | குஷாய்குடா  பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மென் பொறியாளர்களான சதீஷ் (39), வேதா (5) ஆகியோர் வசித்து வந்தனர். அவர்களுக்கு நிஷிகட் ( 9), நிகால் (5) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். பிறந்தது முதல் மகன்கள் இரண்டு பேருக்கும் உடல் நிலையில் தீவிர பாதிப்புகள் இருந்து வந்தன.

எனவே மகன்கள் இரண்டு பேருக்கும் சிகிச்சை அளிக்க கடந்த பல ஆண்டுகளாக அந்த தம்பதி தாங்கள் சம்பாதித்த பணம் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கிய பணம் ஆகியவற்றை தாராளமாக செலவு செய்தனர். இந்த நிலையில் பெரிய மகன் நிஷிகட் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ஆசிரியரை தாக்கிய மாணவரின் குடும்பம்... அனைவரையும் கைது செய்ய போராட்டம்...

இதனால் தீவிர மனவேதனை அடைந்த அவர்கள் இரண்டு பேரும் நேற்று  மகன்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தனர். பின்னர் இரண்டு பேரும் அதே விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களை தொடர்பு கொள்வதற்காக உறவினர்கள் போன் செய்த போது பதில் இல்லாமல் போகவே அருகில் வசிக்கும் நபர்களை தொடர்பு கொண்டு உறவினர்கள் கேட்டிருக்கின்றனர்.

அப்போது அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்கள் சதீஷ் வீட்டிற்கு சென்று கதவை தட்டிய போது கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாமல் போகவே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது நான்கு பேரும் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய குஷாய்குடா போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மிக்கு மீண்டும் ஒரு உயிர் பலி...!!!